மதுவில் மயங்கி

என்றோ ஒருநாள்
என்று குடித்தவன்
ஒருநாளுக் கொருநாள்
என்று குடித்தான் - இன்றோ
நாளில் இரண்டுமுறை
குடித்து அழிகிறான்!
நிதம் மது அரக்கனின்
மடியில் புரள்கிறான்..

குடிமகன்களையெல்லாம்
"குடி"மகன்களாக்கிவிட வேண்டுமென்று
அரசிற்கு ஆர்வமுண்டு!
எந்த விழாவானாலும் - விற்றுத்தீர்த்து
பணம் அள்ளிவிடும் ஆசையுண்டு!

குடித்ததும் திமிரில் அளைகிறான்
தறிகெட்டு தவறுகள் புரிகிறான்
தறுதலையாய் எங்கும் திரிகிறான்
தன்மானங்கெட்டு நடக்கிறான்
படித்தவனும் ஒன்றுதான் - குடித்தபின்
படிப்பறிவில்லாதவனும் ஒன்றுதான்!
இரண்டுமே மானமழிந்த அதுகள்தான்!

வீட்டுக்கொரு குடிகாரன்!
இது நேற்றைய நிலைமை!
வீடுமுழுதும் குடிகாரனாகாமல்
தடுப்போம் இப்பொழுதே!

அண்ணன் தம்பி மகன்
கணவன் வருங்காலகணவன்
காதலன் - எந்த ஆணும்
குடிப்பானெனில் - பெண்ணே!
ஒருபோதும் அனுமதிக்காதே!
உன்னை மிரட்டினால் விரட்டு!
இவர்கள் என்றேனும் - உன்னை
படுகுழியில் தள்ளுவதுறுதி!
உன்னையும் மதிமயக்கிடத்துடிக்கும்
மதுவை ஒழி - இனியேனும்
தன்மானத்தோடும் நல்மதியோடும்
தமிழினம் வாழட்டும் - எதிர்வரும்
தலைமுறையாவது நலமாகட்டும்!

எழுதியவர் : சீர்காழி சபாபதி (24-Apr-14, 10:42 pm)
பார்வை : 1254

மேலே