பழுதடையும் உறவுகள்

கருத்து
வேறுபாடுகள்
வேறுபாடுகளால்
விவாதங்கள்
விவாதங்களால்
இடைவெளிகள்
இடை வெளிகளால்
விவாகரத்துகள்
விவாகரத்துகளின்
திருத்தல்களால்
உறவுகளின் முறிவுகள்
முறிவுகளால்
பழுதடைந்த உறவுகள் ....
உறவுகளில் விரிசல்கள் ....
புற்று நோயை போல் பரவும்
பழுதடையும் உறவுகளின்
ஆணி வேரை ஆயிந்தால்
நாம் ஒதுக்கபடுவோமோ என்ற ...
இயலாமையால் ஏற்படும் பயம்
பயத்தால் கோபம்
கோபம் மதிக்க படாததால் வருத்தம்
கடமைகளை
செய்யவில்லையோ என்ற
குற்ற உணர்வு ...
மண வாழ்க்கையின்
மன பாதிப்பு
சுவாசத்தில் தடைகள்
வேகமான இதய ஓட்டம்
குற்ற உணர்ச்சி
அவல நிலை
தியான கூடங்கள் ....
அமைதி தேடல்கள் ....
ஏற்றமிகு மாற்றங்களுக்கு
வாழ்க்கை எனும் இயந்திரம்
பழுதடையாமல் ஓட
மனிதர்களின் வித விதமான
மன ஓட்டத்தை
அறிந்தால்
தீர்வு உறுதி
உணர்சிகளை
எதிர்மறை எண்ணங்களை
ஒதுக்கி
அழுத்தம் அதிகமானால்
மனிதர்களை
ஒதுக்கும் மனிதர்கள் :
சந்தோசம் தான்
பிரதானம் என
சந்தோசத்தை பரப்பும் மனிதர்கள் .
:
அமைதியாய் இருந்து
ஆக்ரோஷத்தை
வெளிபடுத்தும் மனிதர்கள்
பட்டாசு போல்
வெடிக்கும் மனிதர்கள்
சுழலில் மாட்டி
இறையாய்
சிக்கும் மனிதர்கள் .
பழுதடைந்த உறவுகள்
பழுதடைந்த மனதினால் மட்டுமே .....
பணத்தால்
அமைதியை
வாங்க முடியாது
உறவுகளின் விரிசல்களை
சீர் செய்ய முடியாது
அர்த்தம்முள்ள வாழ்க்கையை
உருவாக்க முடியாது
அதனால்
மன அமைப்பை அறிந்து
பழுதுகளை சீர் செய்து
மணமான மண வாழ்க்கையில்
முத்திரை பதிப்போம் .