நினைவுகள்
நெஞ்சில் தோன்றும் நினைவுகள்..
நினைவுகளின் பிம்பங்களாய் உன் முகம் மாட்டும்..
நினைத்த எடுப்பில் வந்து விடுவதில்லை அழுகை..
நினைவுகளின் வருடலிலேயே
எட்டிப் பார்த்து விடுகிறது எனக்கு..
நீண்ட நெடுந்தொலைவு நடந்திட பயக்கிறேன்
நின் முகம் காண மட்டும் நடையாய் நடந்த நினைவு..
ஏன் எதற்கு என்று தெரியாமல் சிரிக்கத் துனிகிறேன்
உன் முகபாவங்களின் குழந்தைத்தனத்தின் நினைவு..
மழை மாலைப் பொழுதுகளில் எல்லாம்
உன்னோடு என் சாலையோர தேநீர் நினைவு..
கடற்கரையின் மணல்வெளியில் கால் பதிக்க நடுங்குகிறேன்
கை கோர்த்து பலமணி கடத்திய நினைவு..
ஜாமத்தில் விழித்திட மறுக்கிறேன்
கனவுலகிலேயே வாழ்ந்து மடிந்திட அற்ப்பாசை..
நின்னோடு இருக்கையில் எல்லாம் நினைத்ததுண்டு
இது நினைவு கோர்வையின் ஓர் முத்தென்று..
நினைவுகள் நெருடலானது...!
நினைவுகளிலே வாழ்த்து விடலாம்தான்
கனவு உலகம் மெய்ப்படுமெனில்..!
அப்படியொரு நாள் நோக்கி காத்திருக்கிறேன்..!
உன் நினைவுகளுடனே கனவுலகில் கரைகிறேன்..!