ஒரு சுவரெட்டியின் குரல்..!

ஒரு சுவரெட்டியின் குரல்..!

தமிழகத்தில் திராவிடம் மலர்ந்ததாக மார் தட்டிக் கொள்ளும் இதே காலகட்டத்தில்தானே ஈழத்தில் தமிழர்கள் தன்னுரிமைக்காகப் போராடி வந்தார்கள்.

பல கோடித் தமிழர்களின் தலைமையை ஏற்ற திராவிடம் சில லட்சம் தமிழர்கள் ஈழத்தில் அல்லலுற்றபோது என்ன செய்தது??

குட்டிமணி செகனைக் காட்டிக் கொடுத்ததிலிருந்து முள்ளிவாய்க்கால் படுகொலை வரை நீங்கள் போட்ட நாடகங்கள் எத்தனை எத்தனை?

காவிரியைக் கன்னடர்களிடம் காவு கொடுத்தது எப்போது ?

பாலாறு பாழனாது திராவிடத்தின் ஆட்சியில் இல்லையா ?

முல்லைப்பெரியாறு சிக்கல் முற்றியதிலும் உங்கள் கையாலாகாத்தனமும் காட்டிக் கொடுப்பும் இல்லையா ?

கிழக்குக் கடற்கரையில் 550 மீனவத் தமிழர்கள் அன்னியநாட்டுப் படையால் காக்கைக் குருவி போல சுட்டுத் தள்ளப்பட்டபோது கைசூப்பிக் கொண்டு கடுதாசி போட்டீர்களே தவிர உருப்படியாக எதைச் செய்து அப்படுகொலைகளைத் தடுத்தீர்கள் ?

கச்சத் தீவு தாரை வார்க்கப்பட்டபோது என்ன செய்தீர்கள் ?

இறுதியில் திராவிடத்தின் சாதனைதான் என்ன ?

இந்த திருட்டு திராவிடம், தமிழ் மண்ணில் இருக்கவேண்டுமா என்பதை"தமிழனே முடிவு செய்யவேண்டும்"....!

தமிழன்

எழுதியவர் : சங்கிலிக்கருப்பு (10-Dec-12, 2:43 pm)
சேர்த்தது : சங்கிலிக்கருப்பு
பார்வை : 122

மேலே