உன் காதலில் நான் !!!
உனைத் தொட
உயிர் தொட
தூரம் கடந்திட
உலகம் மறந்திட
புது ஆசை ...
அணைத்திட
அழுதிட
அழகை அளந்திட
ஆசை அனலிட
புது பாஷை ...
சிவக்கிறேன் உன் கண்பட ...
திறக்கிறேன் இன்று நீ தொட ..
அள்ளி கொண்டு நீ அணைத்திட
அந்தியில் நான் அணைந்திட ..
உன் வாசம் என்னை சூழ்ந்திட
என் சுவாசம் அதில் ஆழ்ந்திட
கட்டியணைக்கும் நேரம்
இத்தனையும் மறந்திட
என்னையும் கொல்கிறாய்
மறுநொடி பிறந்திட ...
சிறு முத்தமும் உயிர் வலி கொடுத்திட
உன் மொத்தமும்
உயிர் பலி எடுத்திட ..
உன்னில் நிறைகிறேன்
நான்
என்னையே கரைத்திட ...!!!

