உணர்வுகளால் உருவான வீடு

ஆரம்பமாய் நாங்கள்
ஒன்றாய் இருந்த வீடு
அத்தனை ஏழ்மையிலும்
திருப்தியாய் வாழ்ந்த வீடு
சுவரின் ஒவ்வொரு துளைகளும்
எங்கள் துன்பங்களால் நிரம்பிய வீடு
தேய்ந்த தலையனணக்கு பாரமாய்
எம் தாயின் கண்ணீரைக் கொண்ட வீடு
உழைப்பிற்கும்-முகாமைக்கும்
பண்பிற்கும்-அன்பிற்கும்
வாழ்விற்கும்- தெளிவிற்குமாய்
எம் பெற்றோரை சொத்தாய் கொண்ட வீடு
எம் ஐவரையும்
ஐந்து துறைகளில் தசாத்தாய் கொண்டிட்ட
எம் தாயின் பிரயத்தனங்களை
முழுவதுமாய் கொண்ட வீடு
ஊரார் கண்பட
நாங்கள் இறையின் துணையோடு
உயர்ந்ததை அணு அணுவாய் ரசித்த வீடு
புதியன புகுந்த போதும்
தினமும் எங்கள் நினைவுகளை மீட்டிட
நிம்மதியைப் பெற்றிட-நாங்கள்
சாயங்காலங்களில் கூடும் வீடு
இன்று......
தன் உறவை மாற்றிக் கொண்ட
எம் சகோதரியின்
பிரிவால் பாழடைந்தபொழுதுககால்
மூடப்பட்ட வீடு
அதன் ஒவ்வொரு வர்ணம் உதிர்ந்த அறைகளும்
அவளையே எதிரொலிக்கிறது...
இன்னும்
காய்த்து போன அவளின் சிறு வயது கிறுக்கல்களை
சுகமாய் பேசுகிறது..
உனக்கு எங்கள் நினைவு வருமா
சபா?????????