பிழையல்லாத பிழை
உனக்கான
கடிதங்களிலும்
வாழ்த்து அட்டைகளிலும்
உன் பெயரை
பிழையோடு எழுதிவிடுகிறேன் என்று
வருத்தப்படுகிறாய் நீ!
உன் பெயரை
நினைக்கும்போதெல்லாம்
என் தாய்மொழி எனக்கு
மறந்துபோய்விடுகிற
வினோதம் புரியாமல்
உனக்கான
கடிதங்களிலும்
வாழ்த்து அட்டைகளிலும்
உன் பெயரை
பிழையோடு எழுதிவிடுகிறேன் என்று
வருத்தப்படுகிறாய் நீ!
உன் பெயரை
நினைக்கும்போதெல்லாம்
என் தாய்மொழி எனக்கு
மறந்துபோய்விடுகிற
வினோதம் புரியாமல்