எப்படி முடியும்??
எப்படி முடியும் உன்னை மறக்க??
விழித்திருக்கும் போது - உன்னை
காண துடிக்கும் விழிகள் !!
நீ இல்லாத போது - உன் வாசம் நுகரும் நாசி !!
அசைகின்ற போதெல்லாம் - உன்னை பற்றி
பேச காத்திருக்கும் உதடுகள் !!
உறங்கும் போதும் - உன் தாலாட்டை
எதிர் பார்த்து செவிகள் !!
ஒவ்வொரு நொடியும் - உன்னை நினைவூட்ட காத்திருக்கும் என் மனம் !!
இதையும் மீறி ஒரு வழி உள்ளது .. என்றால்
அதையும் நீயே சொல் - என் புத்திக்கு !!