விசித்திரசித்தன் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : விசித்திரசித்தன் |
இடம் | : united kingdom |
பிறந்த தேதி | : 19-Dec-1992 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 28-Apr-2011 |
பார்த்தவர்கள் | : 272 |
புள்ளி | : 120 |
22/02/2011
சமர்களில் அசிங்கமான சமர்
நரிகளின் ஒத்தாசையுடன்
ஓநாய்கள் நடத்திய அழிப்புத்திருவிழா
கோட்பாடற்ற காட்டுமிராண்டியின்
அறமற்ற காவு கொடுக்கும் யாகம்
சுதந்திரம் மகிழ்ச்சி இழந்த
குடும்பங்கள் வாழ்வையும் பரித்து
முடிவென்று முடிவெடுத்து முடுவுவரை
சமரிட்ட மறவர்கள் கனவையும் அழித்து
சுடுகாட்டில் முற்றுப்பெற்ற காவு யாகம்
தமிழனின் தாகம் தமிழீழ தயக கனவை
தமிழுக்குள் விதைத்து முடிந்த சமர்
சமர்களில் அசிங்கமான சமர்
18/05/2009
கருப்பு மயிலிறகாய்
உன் கூந்தல் ஒரு அழகு
அச்சில் வார்த்த பதுமையாய்
உன் உடல் நெலிவுகள் அழகு
மாலை வெயிலில் ஜொலிக்கும்
உன் மன்னிர மேனி என்ன அழகு
உன்னுடன் இனைந்தால்
உலகம் ரொம்ப அழகு
என்னவள் இயற்கையே...
கார்மேகம் குடை சூழ்ந்தாலும்
சூரியன் அழிவதில்லை
என் மதமோ உன் இனமோ
பிரிவுக்கு குறைகளில்லை
அன்பை யார் போதித்தாலும்
போர்கள் தீர்வதில்லை ..
நல்லாட்சி நாளை வருமெனும்
கனவிற்கு பஞ்சமில்லை
கார்மேகம் அழியும் நாள் அது
மிக மிக தொலைவில் இல்லை ..
இல்லை என்று சொல்லடா
முதலாளித்துவ வியாபாரி
உன்னையும் என்னையும்
பலரையும் கொண்டு உண்பான்,
வேண்டாமென எதிர்த்து நில்
நம் தலைமுறைகள் வாழட்டும்
உன் உடம்போ என் உடம்போ
உள்ளோடும் இரத்தம் ஒரே நிறம்
என நிமிர்ந்து நில் மனிதனாய் .
மூவைந்து போர்க்களம் கண்ட
ஐம் பொறியும் தமிழ் உச்சரிக்கும்
இந்திரனும் பொறாமை கொள்ளும்
சிவ பக்தனும் வெட்கம் உணர்வான்,
உன் கண் பார்த்து பேசையில்...