முள்ளிவாய்க்கால் நினவு மே18

சமர்களில் அசிங்கமான சமர்
நரிகளின் ஒத்தாசையுடன்
ஓநாய்கள் நடத்திய அழிப்புத்திருவிழா
கோட்பாடற்ற காட்டுமிராண்டியின்
அறமற்ற காவு கொடுக்கும் யாகம்

சுதந்திரம் மகிழ்ச்சி இழந்த
குடும்பங்கள் வாழ்வையும் பரித்து
முடிவென்று முடிவெடுத்து முடுவுவரை
சமரிட்ட மறவர்கள் கனவையும் அழித்து
சுடுகாட்டில் முற்றுப்பெற்ற காவு யாகம்

தமிழனின் தாகம் தமிழீழ தயக கனவை
தமிழுக்குள் விதைத்து முடிந்த சமர்
சமர்களில் அசிங்கமான சமர்
18/05/2009

எழுதியவர் : விசித்திரசித்தன் (19-May-20, 12:27 pm)
சேர்த்தது : விசித்திரசித்தன்
பார்வை : 456

மேலே