கவிஞர் மீன் கொடி பாண்டிய ராஜ் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  கவிஞர் மீன் கொடி பாண்டிய ராஜ்
இடம்:  திருப்பூர்
பிறந்த தேதி :  15-Aug-1996
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  02-Dec-2014
பார்த்தவர்கள்:  65
புள்ளி:  5

என்னைப் பற்றி...

கவிஞர் மீன் கொடிபாண்டிய ராஜ் , தாய்த்தமிழ் பட்டிமன்றக்குழு தலைவர், பட்டிமன்ற பேச்சாளர், கவிஞர்

என் படைப்புகள்
கவிஞர் மீன் கொடி பாண்டிய ராஜ் செய்திகள்

வெற்றிலைபாக்கு போட்டு 
மென்று துப்பும் மூதாட்டி 
வானம் பார்க்கச் சிவந்த நிலா 

       பாண்டிய ராஜ்

மேலும்

அரசு மரியாதை 
அனுபவிக்க முடியவில்லை 
உயிர் பிரிந்த முதல்வர்

சந்தனப்பேழையில் 
சரித்திரம் உறங்குகிறது 
முதல்வர்

பலத்த பாதுகாப்பு 
இறந்த முதல்வருக்கு
சந்தனப்பேழை

வீசப்பட்டது வலை
களைந்து போனது 
மீனவன் வறுமை
 
கொளுத்தும் வெயில்
பிறந்தது மகிழ்ச்சி
கோடை விடுமுறை

கோடை விடுமுறை 
வந்தது கவலை 
பெட்டிக்கடை மூதாட்டிக்கு 

சுடுகிறது பாதம் 
கவனிக்கவில்லை 
விளையாட்டு ஆர்வம் 

நீச்சல் கற்கும் சிறுவன் 
மெதுவாய் கலைந்தது 
தண்ணீரின் பயம் 

விளையாடும் சிறுவன் 
கடிந்து பேசினாள் 
பட்டணத்துத் தாய்

 அதிகாலை சூரியன் 
தூக்கம் கலைத்தது 
அம்மாவின் சமையல் 
 
அனாதை இல்லம் 
சொந்தம் கொண்டாடினான் 
நில உரிமையாளர்

தடுப்புச்சுவர் 
விரிசல் கண்டது 
தலைபிரசவம்

தலைக்கவசம்
பாதுகாப்பானது 
காதலர்களுக்கு 

மதுபான புட்டி
அதிகமானது 
தலைக்கனம்

விட்டில் பூச்சி 
தாவிக் குதித்தது
இளமைப் பருவம்

மெழுகுவர்த்தி உருக 
கரைந்து கொண்டே வந்தது 
நம்பிக்கை

காதல் கவிதைகள் 
படிப்பதில் வருத்தம் 
தேர்வு

பாட்டி வைத்தியம் 
உயிரைக் காத்தது 
மந்தல் காமாலை

தார்ச் சாலை 
சுடுகிறது
தேநீர்

கல்லின் சுமை 
தாங்க முடியவில்லை 
பட்டினி

சாதனை மனிதன் 
சாய்ந்து கிடக்கிறான் 
கல்லறை

ஏழை உழவன் 
அதிகம் கொடுத்தான் 
உழைப்பு

குழந்தை பிறந்தது 
கூடவே சேர்ந்தது 
குடும்ப பாரம்

செயற்கை விளைச்சல் 
அதிகம் கண்டது 
நோய்

மனம் ஒத்த காதல் 
பிரிந்து போனது 
தாய் தந்தை உறவு

உத்தமன் கிடைத்தான் 
கடைசிவரை கிடைக்கவில்லை 
வேலை

பட்டம் படித்தும் 
கிடைக்கவில்லை 
நிம்மதி

என்னை இழந்தேன் 
மீண்டும்  பிறந்தேன் 
முயற்சி

உணர்வுகள் கலந்து 
துளைத்துப் போனது 
நம்பிக்கை

வீசிய தூண்டில் 
சிக்கிக் கொண்டது 
குளத்துப் பாசி 

      பாண்டிய ராஜ்

மேலும்

பணம் படைத்த ஜென்மம்
குணம் படைப்பது இல்லை
குணம் படைத்த ஜென்மத்திற்குப்
பணம் கிடைப்பது இல்லை

பணமா குணமா என்ற
போராட்டத்தில் எப்போதும்
தோல்வி பக்கம் இருக்கிறது
பாழாய்ப் போன குணம்

கொட்டக் கொட்ட நம்
குனியும் பழக்கம்
நாளடைவில் வாங்கி தருகிறது
அடிமை என்ற பட்டத்தை

எப்படியோ தெரியவில்லை
வங்கிகள் வெளியிட்ட பணம்
தேடிப் போய்ச் சேருகிறது
இப்படிப்பட்ட முதலையிடம்

கட்டுக் கட்டாகப் பணம் இருந்தும்
கடுகளவும் இருப்பதில்லை
இரக்கக் குணமும்
இளகிய மனமும்

விசித்திரமான உலகம் இது
இறைவன் படைத்தது உண்மைதான்
வாழும் போதே நரகம் அனுபவிக்கப்
பணத்தை மட்டும் தேடு போதும்

வார

மேலும்

அகோரப் பசியில் பிறந்த பறவை
இந்த மானிடப் பிறப்பு தான்
இயற்கையைக் காக்கத்தான் இறைவன் படைத்தான்
என்பதைப் பொய்யாக்கிய யோக்கியன்

குடிப்பதற்கு தண்ணீர் இல்லை என்று
தோண்ட ஆரம்பித்தான் இந்த
ஈவு இரக்கமற்ற அரக்கன்
ஆழ்துளை ஆழமாகத் தோண்டுகிறான்

எந்த அளவு தான் முடியுமோ
அந்த அளவுக்கு பூமியை காயமாக்குகிறான்
மீத்தேன் எடுக்கிறேன் என்று

போதாதக்குறைக்கு திரும்பும் இடம் எல்லாம்
கொட்டி குமிக்கின்றான் கோடிக்கணக்கில்
நெகிழி குப்பைகள

விஞ்ஞான வளர்ச்சி என்றான்
விறுவிறுப்பான வளர்ச்சி என்றான்
ஏனோ என்பரம்பறையைக் காத்த
விவசாய நிலம் இன்று மலடாகி கிடக்கிறது

மாட மாளிகை கட்டி வாழ
மண்ணை மலடாக்கிய மானிடப் பிறவி
உயிர் பிழைத்து வாழ்கிறதே
என்று எப்போதும் கண்ணீர் வடிக்கும் விவசாயி

என்னதான் நடக்குமோ நடக்கட்டும்
இருக்கும் வரை வாழ்ந்துவிட்டு போகட்டும்
என்று எப்போதும் நம்மை காக்கும்
இந்த மண்ணை மதிக்கவில்லை
என்றாலும் பரவாயில்லை
மிதிக்காமலாவது இருங்கள்

என்று எழுதி வைத்துவிட்டு
தற்கொலை செய்து கொண்டது
இயற்கையை நேசித்த ஒரு பறவை

கவிஞர் மீன் கொடி
கி.பாண்டிய ராஜ்
திருப்பூர்
7868062287
9543625422

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே