எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

அகோரப் பசியில் பிறந்த பறவை இந்த மானிடப் பிறப்பு...

அகோரப் பசியில் பிறந்த பறவை
இந்த மானிடப் பிறப்பு தான்
இயற்கையைக் காக்கத்தான் இறைவன் படைத்தான்
என்பதைப் பொய்யாக்கிய யோக்கியன்

குடிப்பதற்கு தண்ணீர் இல்லை என்று
தோண்ட ஆரம்பித்தான் இந்த
ஈவு இரக்கமற்ற அரக்கன்
ஆழ்துளை ஆழமாகத் தோண்டுகிறான்

எந்த அளவு தான் முடியுமோ
அந்த அளவுக்கு பூமியை காயமாக்குகிறான்
மீத்தேன் எடுக்கிறேன் என்று

போதாதக்குறைக்கு திரும்பும் இடம் எல்லாம்
கொட்டி குமிக்கின்றான் கோடிக்கணக்கில்
நெகிழி குப்பைகள

விஞ்ஞான வளர்ச்சி என்றான்
விறுவிறுப்பான வளர்ச்சி என்றான்
ஏனோ என்பரம்பறையைக் காத்த
விவசாய நிலம் இன்று மலடாகி கிடக்கிறது

மாட மாளிகை கட்டி வாழ
மண்ணை மலடாக்கிய மானிடப் பிறவி
உயிர் பிழைத்து வாழ்கிறதே
என்று எப்போதும் கண்ணீர் வடிக்கும் விவசாயி

என்னதான் நடக்குமோ நடக்கட்டும்
இருக்கும் வரை வாழ்ந்துவிட்டு போகட்டும்
என்று எப்போதும் நம்மை காக்கும்
இந்த மண்ணை மதிக்கவில்லை
என்றாலும் பரவாயில்லை
மிதிக்காமலாவது இருங்கள்

என்று எழுதி வைத்துவிட்டு
தற்கொலை செய்து கொண்டது
இயற்கையை நேசித்த ஒரு பறவை

கவிஞர் மீன் கொடி
கி.பாண்டிய ராஜ்
திருப்பூர்
7868062287
9543625422

நாள் : 10-Dec-21, 7:47 pm

மேலே