எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

செல்லாக் காசு சொல்லும் சேதி வர்ணங்கள் பூசாது கருப்புப்...

செல்லாக் காசு சொல்லும் சேதி 

வர்ணங்கள் பூசாது 
கருப்புப் பணம் என
பேர்வாங்கிய காகிதம்

கட்டுக் கட்டாய் வீட்டில் 
இருந்தும் ஒரு வேளை 
கஞ்சிக்கு இனி உதவாது 

பஞ்சு மெத்தைக்கு அடியிலும்
பங்காளி பேரிலும் பதுக்கிய 
காகிதம் இனி செல்லாது 

நெகிழியில் போட்டு 
இறுக்கக் கட்டி தொட்டிக்கு அடியில்
பதுக்கியது இனி காகிதம் 

பசிக்குச் சோறு கேட்ட 
சிறுவனுக்குக் கிடைக்காதது 
இனி யாருக்கும் இல்லை 

 காசேதான் கடவுள் 
அந்த கடவுளுக்குள் ஊழல் 
கடந்து வருகிறது சுதந்திரம்

உலகம் உருண்டைதான் 
என்பதை நெத்தி பொட்டில் 
உணர்த்தும் தருணம் 

கதர் சட்டையும் 
பட்டு மேனியும் உடுத்தியவன் 
இன்று படபடத்துக் கிடக்கிறான் 

பக்கத்தில் இருப்பவை நம்புவது 
பங்காளியை நம்புவது 
என்ற குழப்பத்தில் 

மேனி கறுத்த உழவன்
மேலே பார்க்கிறான் 
என் பாரதம் என்னை 
விட்டு விடாது என்ற
ஓர் நம்பிக்கையோடு

      பாண்டிய ராஜ்

நாள் : 10-Dec-21, 7:46 pm

மேலே