எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

இந்த உலகில் எதற்கு பிறக்கிறோம்? மாற்றங்கள் பல அடைந்து...

இந்த உலகில் எதற்கு பிறக்கிறோம்? மாற்றங்கள் பல அடைந்து இறுதியில் இறப்பதற்கு. உடலில் ஏற்படும் மாற்றங்கள் அதிகமாக இயற்கையாக நிகழ்பவை. மிகவும் சிறிதான குழந்தை வடிவில் பிறந்து , உயரம் அதிகரித்து, உடல் உறுப்புகளின் நீளம் மற்றும் கனம் (மண்டை  கனமும் தான்) அதிகரித்து பின்னர் வயதான பின் இந்த உறுப்புகள் பலவீனம் அடைந்து நிறைவாக உயிர் பிரிகையில் பட்டு சுட்டுவிடுகிறது. இருக்கும் இந்த இடைவெளியில் இந்த உடலை பேணி பாதுகாப்பதே ஒரு பெரிய ப்ராஜெக்ட். சிலருக்கு அதிக செலவு இல்லாமலே இந்த ப்ராஜெக்ட் நல்ல நடக்கும். வேறு பலருக்கு செலவுகள் வந்த வண்ணம் இருக்கும் ஆனால் ப்ராஜெக்ட் ரொம்ப வீக்கா தான் இருக்கும்.

 
மனதளவில் ஏற்படும் மாற்றங்களுக்கு நாமே, நம் மனமே காரணம். வயது முதிர்ச்சி அடைய அடைய,  நம் மனதின் எண்ணங்களிலும் மாற்றம் பல ஏற்பட்ட வண்ணம் இருக்கிறது. ஏன், நேற்று நாம் கொண்டிருந்த எண்ணம் இன்று இருப்பதில்லை. இப்போது உள்ள நம் மனநிலை இன்னும் ஒரு மணி நேரம் கழித்து எப்படி இருக்கும் என்பது தெரியாது. ஏதோ விழித்தோம், சாப்பிட்டோம், உழைத்தோம், சிரித்தோம், களைத்தோம், தூங்கினோம் மீண்டும் எழுந்தோம் என்று இல்லாமல் ஆறறிவுடன் பிறந்து, தலையை வாரிக்கொள்வது மட்டும் இல்லாமல்(வழுக்கை மனிதர்களுக்கு இந்த வேலையும் மிச்சம்), தினசரி பிய்த்துக்கொள்ளவும் வேண்டும் (முடி இல்லையெனினும் வழுக்கை நபர்கள் தலையை தடவித்தான் ஆகவேண்டும்).  இதனால் ஒவ்வொரு நாளும் மிகவும் அவஸ்தை படுகிறோம். ஆசை என்ற ஒரு மாய மந்திரத்தால் எல்லா கஷ்டங்களையும் கஷ்டப்பட்டு அனுபவித்தும் ஏற்றுக்கொண்டும்  வாழ்கிறோம். நன்கு கவனத்தினால் இந்த ஆறாவது அறிவு தான் நம் எல்லோரையும் இந்த பாடு படுத்துகிறது. இது நம்மை தூங்க வைக்க தொட்டிலை ஆட்டிவிடுகிறது அதே சமயத்தில் நறுக்கு நறுக்கு என்று கிள்ளியும் விடுகிறது, அப்புறம் எங்கே தூங்க, அப்படி தூங்கினாலும் எப்படி நிம்மதியாக தூங்க? ஏங்க, நான் சொல்றது சரிதானாங்க? அட போங்க நீங்க !         

பதிவு : Ramasubramanian
நாள் : 11-Dec-21, 8:17 am

மேலே