எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

கடின உழைப்புக்கு ஈடாக எதுவும் இல்லை என்பதை ஏற்றுக் கொள்ள கடினம் அவசியமில்லை. ஆனால் கடின உழைப்பின் உள்ளார்ந்த அர்த்தம் என்ன என்பதை நாம் நன்கு உணர வேண்டும். வெறும் கைகளில் காற்றை அடித்தால் சத்தம் வருமா? அப்படி என்றால், இலக்கு என்ன,  அதை எப்படி அணுக வேண்டும், அதற்கு வேண்டிய சாதனங்கள் யாது என்பதை அறிந்து தெரிந்து கொள்ளாமல் வெறும் கையில் முழம் போடுவது எந்த ஒரு பூ மாலையோ பூவின் மணம் நிச்சயமாக கிடைக்காது. 

எனவே, கடின உழைப்பு தேவை தான். ஆனால் அதற்கு வேண்டிய குறைந்த பட்ச அறிவு, அடிப்படை தேவைகள், அதை முறையாக செய்யும் பக்குவம் மற்றும் திறமை இருப்பின் கடின உழைப்பு சாதாரண பலனை மற்றும் அல்லாது நிறைந்த கூடிய வெற்றியை கண்டிப்பாக பெற்று தரும். 

மேலும்

இந்த உலகில் எதற்கு பிறக்கிறோம்? மாற்றங்கள் பல அடைந்து இறுதியில் இறப்பதற்கு. உடலில் ஏற்படும் மாற்றங்கள் அதிகமாக இயற்கையாக நிகழ்பவை. மிகவும் சிறிதான குழந்தை வடிவில் பிறந்து , உயரம் அதிகரித்து, உடல் உறுப்புகளின் நீளம் மற்றும் கனம் (மண்டை  கனமும் தான்) அதிகரித்து பின்னர் வயதான பின் இந்த உறுப்புகள் பலவீனம் அடைந்து நிறைவாக உயிர் பிரிகையில் பட்டு சுட்டுவிடுகிறது. இருக்கும் இந்த இடைவெளியில் இந்த உடலை பேணி பாதுகாப்பதே ஒரு பெரிய ப்ராஜெக்ட். சிலருக்கு அதிக செலவு இல்லாமலே இந்த ப்ராஜெக்ட் நல்ல நடக்கும். வேறு பலருக்கு செலவுகள் வந்த வண்ணம் இருக்கும் ஆனால் ப்ராஜெக்ட் ரொம்ப வீக்கா தான் இருக்கும்.

 
மனதளவில் ஏற்படும் மாற்றங்களுக்கு நாமே, நம் மனமே காரணம். வயது முதிர்ச்சி அடைய அடைய,  நம் மனதின் எண்ணங்களிலும் மாற்றம் பல ஏற்பட்ட வண்ணம் இருக்கிறது. ஏன், நேற்று நாம் கொண்டிருந்த எண்ணம் இன்று இருப்பதில்லை. இப்போது உள்ள நம் மனநிலை இன்னும் ஒரு மணி நேரம் கழித்து எப்படி இருக்கும் என்பது தெரியாது. ஏதோ விழித்தோம், சாப்பிட்டோம், உழைத்தோம், சிரித்தோம், களைத்தோம், தூங்கினோம் மீண்டும் எழுந்தோம் என்று இல்லாமல் ஆறறிவுடன் பிறந்து, தலையை வாரிக்கொள்வது மட்டும் இல்லாமல்(வழுக்கை மனிதர்களுக்கு இந்த வேலையும் மிச்சம்), தினசரி பிய்த்துக்கொள்ளவும் வேண்டும் (முடி இல்லையெனினும் வழுக்கை நபர்கள் தலையை தடவித்தான் ஆகவேண்டும்).  இதனால் ஒவ்வொரு நாளும் மிகவும் அவஸ்தை படுகிறோம். ஆசை என்ற ஒரு மாய மந்திரத்தால் எல்லா கஷ்டங்களையும் கஷ்டப்பட்டு அனுபவித்தும் ஏற்றுக்கொண்டும்  வாழ்கிறோம். நன்கு கவனத்தினால் இந்த ஆறாவது அறிவு தான் நம் எல்லோரையும் இந்த பாடு படுத்துகிறது. இது நம்மை தூங்க வைக்க தொட்டிலை ஆட்டிவிடுகிறது அதே சமயத்தில் நறுக்கு நறுக்கு என்று கிள்ளியும் விடுகிறது, அப்புறம் எங்கே தூங்க, அப்படி தூங்கினாலும் எப்படி நிம்மதியாக தூங்க? ஏங்க, நான் சொல்றது சரிதானாங்க? அட போங்க நீங்க !         

மேலும்

காலை வணக்கம்
இன்று ஒரு சந்தர்பம், இந்நாளை பொன்னாளாய் அமைத்திட. அதற்கு தேவை அதிகம் எதுவும் இல்லை. எது நடப்பினும் புன்னகை பூத்து அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். காணும் குறைபாடுகளை மாற்றி அமைக்க முயற்சி செய்ய வேண்டும். மாற்ற முடியாததை ஏற்றுக் கொள்ள வேண்டும். முடிந்தால் கடுகளவாவது உதவி செய்ய வேண்டும். ஆனால் இம்மியளவும் பிறருக்கு தீமையை நினைக்கவோ செய்யவோ ஆகாது. உணவு ஆடை இடம் மூன்றும் இருப்பின் இறைவனுக்கு நன்றி சொல்லி பிறருக்கும் அது போல அமைய ஒரு நிமிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும். அவ்வளவே.. நீங்கள் நிச்சயமாக மகிழ்ச்சியுடன் இரவில் உறக்கம் கொள்வீர்கள். 
ஆனந்த ராம்

மேலும்

ஆக்கம் எப்போதும் அறிவைத் தருமா, கூற முடியாது. ஊக்கம் எப்போதும் உயர்வு தருமா, சொல்ல முடியாது. ஆனால் ஊக்கம் பலரை செயலில் ஈடுபடச் செய்யும். ஊக்கம் என்பது ஒரு மிக அவசியமான தினசரி மல்டி விட்டமின் மாத்திரை ஆகும். இன்னும் சொல்லபோனால் ஆக்கம் பலருக்கு வண்டி ஓடத் தேவைப்படும் பெட்ரோல் போன்றது 

அதட்டி வேலை வாங்குவதைத் காட்டிலும் தட்டி வேலை வாங்கினால் திறன் நன்றாக வெளிப்படுத்தப்படும். நானும் இந்த வகையைச் சார்ந்தவனே. இதன் அடிப்படை காரணம் என்ன என்று பார்த்தால், எந்த ஒரு மனிதனுக்கும் தன்னை மற்றவர்கள் கவனிக்க வேண்டும், ஊக்குவிக்க வேண்டும், பாராட்ட  வேண்டும் என்ற நினைப்பு நிச்சயமாக உண்டு. அப்படி என்றால் ஒருவரை மற்றொருவர் தட்டி கொடுக்கும் போதும் அல்லது ஊக்குவிக்கும் போதும் ஊக்குவிக்கப் பட்டவருக்கு ஒரு உற்சாகம் வருகிறது அல்லது ஏற்கனவே உள்ள உற்சாகம் இன்னும் கூடுகிறது. உற்சாகம் இருப்பின் ஒருவரின் சக்தி இன்னும் அதிகரிக்கும். இதன் விளைவாக அவர் செய்யும் காரியங்கள் சோபிக்கும், அதனுடன் அவருடைய திறமையும் முழு வீச்சில் செயல்படும் போது முடிவு நிச்சயமாக நன்மையாகவே அமையும். 

மேலும்

பசியை ஓரளவுக்கு அடக்க முடியும். மூச்சை கூட சில நொடிகள் அடக்க முடியும். ஆனால் கோபத்தை அடக்குவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. இதற்கு நான் வேறு பலருடைய அனுபவங்களை சுட்டிக் காட்ட தேவையில்லை. சாட்சாத் நானே மிகவும் சிறந்த உதாரணம். அறுபது வருடங்களாக இவ்வுலகில் வாசம் புரிந்த பின்பும் , தியானம் , விழிப்புணர்வு இவை போன்ற அரிய பயிற்சிகள் செய்துவரினும், இன்றும் கூட, என் மீது கோபம் கொள்ளாமல் என்னை கட்டி அணைத்து என்னை வழி நடத்தி செல்கிறது, கோபம் என்கிற இந்த செல்லப் ( பொல்லாத) பிசாசு. உடல் உபாதைகள் காரணமா, உடல் அயர்ச்சி காரணமா, என்னை நானே முழுவதும் புரிந்து கொள்ளாத நிலை காரணமா, தெரியவில்லை.  கோபத்தில் என் தொண்டை அதிகமாக சத்தம் இடும் நாதம் கேட்கையில், அந்த நேரத்தில் நான் மிகவும் இயற்கையான முறையில் தான் செயல்படுகிறேன் என்று என்னையே நான் கண்டு கொள்ளாமல் விட்டு விட்டாலும், அந்த நிகழ்வுகளுக்கு பிறகு மனம் படும் வேதனை.. ஏராளம்...ஏராளம். இன்று காலை நான் 'இனி கோபத்தில் கூட ஒருவரைஇரைந்து பேசக்கூடாது "என்று உறுதி கொள்கிறேன். இந்த மாதிரி உறுதி மொழியை எவ்வளவு நாட்கள், வாரங்கள், வருடங்களாக நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்(கொண்றிருக்கிறேன்)..? இந்த ஒரு மனிதாபிமானமற்ற செயலை நினைக்கையில் நான் ஒவ்வொரு முறையும் வெட்கி தலை குனிகிறேன். 


மேலும்

காலையில் சுடச்சுட ஒரு செய்தி. பல் விளக்கிய பின்னர் சுடச்சுட ஒரு டம்ளர் காப்பி குடிக்கவில்லை என்றால் அன்று நாளே துவங்காது. இந்த காப்பி கூட சரியாக போடத் தெரியவில்லை என்று ஒரு தம்பதி  காலங்கார்த்தால தினம் சண்டை போடுவதை( கல்யாணம் ஆகி 29 வருடங்களுக்கு பிறகும்) நான் கண்டு ஆச்சரியம் மட்டும் இல்லை மிகவும் மனம் வேதனை அடைகிறேன். 

மேலும்


மேலே