எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

காலை வணக்கம் இன்று ஒரு சந்தர்பம், இந்நாளை பொன்னாளாய்...

காலை வணக்கம்
இன்று ஒரு சந்தர்பம், இந்நாளை பொன்னாளாய் அமைத்திட. அதற்கு தேவை அதிகம் எதுவும் இல்லை. எது நடப்பினும் புன்னகை பூத்து அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். காணும் குறைபாடுகளை மாற்றி அமைக்க முயற்சி செய்ய வேண்டும். மாற்ற முடியாததை ஏற்றுக் கொள்ள வேண்டும். முடிந்தால் கடுகளவாவது உதவி செய்ய வேண்டும். ஆனால் இம்மியளவும் பிறருக்கு தீமையை நினைக்கவோ செய்யவோ ஆகாது. உணவு ஆடை இடம் மூன்றும் இருப்பின் இறைவனுக்கு நன்றி சொல்லி பிறருக்கும் அது போல அமைய ஒரு நிமிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும். அவ்வளவே.. நீங்கள் நிச்சயமாக மகிழ்ச்சியுடன் இரவில் உறக்கம் கொள்வீர்கள். 
ஆனந்த ராம்

பதிவு : Ramasubramanian
நாள் : 10-Dec-21, 10:52 am

மேலே