எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

புன்னகைக்கும் மகிழ்ச்சிக்கும் இடையே ஒளிந்து கொண்டு இருப்பது தான்...

புன்னகைக்கும் மகிழ்ச்சிக்கும்  இடையே ஒளிந்து கொண்டு இருப்பது தான் அமைதி. நண்பர்கள் அதிகம் இருப்பின் புன்னகை அதிக அளவில் புரிய வாய்ப்பு உள்ளது. தனிமையில் தன்னை கூர்ந்து கவனித்து தியானம் செய்திடில் அமைதி பெற வாய்ப்பு உள்ளது. புன்னகை ஒருவரை அமைதியைத் தாண்டி உள்ள மகிழ்ச்சிக்கு நேரடியாக கூட்டிச் செல்லும். ஆனால் அது நீடித்து நிலைக்காது. தனிமையில் தியானம் செய்தால் அமைதி கிட்டும். அது  அப்போதைக்கு மகிழ்ச்சியை அளிக்கும். எப்போதும் இல்லை. உண்மை மகிழ்ச்சி கிடைக்க ஒரே ஒரு வழிதான். அது அன்பு கொண்டு அன்பு காட்டி அன்பைப் பொழிகையில். வேறு என்ன செய்தாலும் புன்னகை புரியலாம், அமைதி காணலாம். ஆனால் உண்மை மகிழ்ச்சியை அல்ல. இருப்பினும், நிறைய புன்னகை பூத்து குலுங்கி அதே நேரத்தில் தனிமையில் நம்மை ஒரு கண்காணிப்பாளராக கவனித்து வரும்போது மகிழ்ச்சி நிச்சயமாக அடிக்கடி வந்து பார்த்து விட்டு செல்லும். எப்போதும் நிறைய மகிழ்ச்சி வேண்டுமா? ஆசைகளை குறைத்து, கோபத்தை முறைத்து, அன்பை நிபந்தனைகள் இன்றி காட்டினால் நிச்சயமாக உண்மை மகிழ்ச்சி ஒருவருடன் கூடிக் களித்து வாழும். 

பதிவு : Ramasubramanian
நாள் : 10-Dec-21, 11:10 am

மேலே