ஆக்கம் எப்போதும் அறிவைத் தருமா, கூற முடியாது. ஊக்கம்...
ஆக்கம் எப்போதும் அறிவைத் தருமா, கூற முடியாது. ஊக்கம் எப்போதும் உயர்வு தருமா, சொல்ல முடியாது. ஆனால் ஊக்கம் பலரை செயலில் ஈடுபடச் செய்யும். ஊக்கம் என்பது ஒரு மிக அவசியமான தினசரி மல்டி விட்டமின் மாத்திரை ஆகும். இன்னும் சொல்லபோனால் ஆக்கம் பலருக்கு வண்டி ஓடத் தேவைப்படும் பெட்ரோல் போன்றது
அதட்டி வேலை வாங்குவதைத் காட்டிலும் தட்டி வேலை வாங்கினால் திறன் நன்றாக வெளிப்படுத்தப்படும். நானும் இந்த வகையைச் சார்ந்தவனே. இதன் அடிப்படை காரணம் என்ன என்று பார்த்தால், எந்த ஒரு மனிதனுக்கும் தன்னை மற்றவர்கள் கவனிக்க வேண்டும், ஊக்குவிக்க வேண்டும், பாராட்ட வேண்டும் என்ற நினைப்பு நிச்சயமாக உண்டு. அப்படி என்றால் ஒருவரை மற்றொருவர் தட்டி கொடுக்கும் போதும் அல்லது ஊக்குவிக்கும் போதும் ஊக்குவிக்கப் பட்டவருக்கு ஒரு உற்சாகம் வருகிறது அல்லது ஏற்கனவே உள்ள உற்சாகம் இன்னும் கூடுகிறது. உற்சாகம் இருப்பின் ஒருவரின் சக்தி இன்னும் அதிகரிக்கும். இதன் விளைவாக அவர் செய்யும் காரியங்கள் சோபிக்கும், அதனுடன் அவருடைய திறமையும் முழு வீச்சில் செயல்படும் போது முடிவு நிச்சயமாக நன்மையாகவே அமையும்.