தமிழ்நிலவு - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/user/user_default_image.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : தமிழ்நிலவு |
இடம் | : தமிழ் தேசம் |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 20-Nov-2014 |
பார்த்தவர்கள் | : 44 |
புள்ளி | : 4 |
சிந்தையை விதையாக்கி எழுத்தை கவிதைப் பயிராக்கும் அரைகுறை கவிஞன் நான்!!!! எண்ணத்தில் விழுவதை எழுத்தாக்கும் பகுதிநேர பாவலன் நான் !!!!
பஞ்சு பிரிச்சு பிழைக்க வச்ச தாயே
நெஞ்சு வலிக்குதுனு சொல்லாம போயிட்டியே
நட்டாத்துல விட்டுட்டு போகலாமா
நீந்தவும் தெரியல எனக்கு சாகவும் தெரியலம்மா
கோழிக் குஞ்சு தலமேல
கம்மாயில காத்திருந்து நிக்கையில
பருந்து குஞ்செடுத்துட்டு போகிட்டா
பத்தே மாசத்துல பிள்ள பிறக்கும்
கூறுகெட்ட குறிகாரன் எவனோ சொல்ல
காத்துக்கிடந்தாயே கம்மாயில
எனக்காக நீ எதுவும் செய்யாமலில்லை
உனக்காக நான் எதுவுமே செய்யலையே
தவமிருந்து பெத்த பிள்ளையம்மா நான் உனக்கு
தனியே தவிக்க விட்டது தான் நியாயமா உனக்கு ?
வாக்கப்பட்டது தான் வீனாப்போனதுனா
வயித்தில் பிறந்ததும் விளங்காமப் போனதாயிருந்தா
என்ன பாடுபட்டிரு
என் கண்கள் வறண்டு விட்டன
என் கைகள் தளர்ந்து விட்டன
என் கால்கள் முடமாகி விட்டன
என் நாளங்கள் நசிந்து விட்டன
நான் மெல்லச் சாகிறேன் -
என் கனவு மட்டும் சாகவில்லை
என் கனவு நனவாகுமா ??
என் கனவு நனவாகுமா??
ஈழக்குயில் முள்வேலி தாண்டி வருமா
வன்னி வீதிகளில் பறந்து திரிந்திடுமா
யாழ் தேவதைகளை அது பகடி பேசிடுமா
வாளேந்திய வவுனியர்களை வியந்திடுமா
ஈழக்குயிலே நீ என்று வருவாய்???
உயிர்த்திருப்பேனா அது வரையும் ???
- தமிழ்நிலவு
ஆண்டபரம்பரையடா நாங்கள்
அரசகுலமடா எங்களது
ஆணவத்தோடு சொல்வேன்
நான் தமிழன்டா !!!
உதறித் தள்ளினாலும்
உதாசீனப் படுத்தினாலும்
உவகையில் சொல்வேன்
நான் தமிழன்டா !!!
சாதியால் பிரித்தாலும்
மதத்தால் வகுத்தாலும்
சகிக்காமல் சொல்வேன்
நான் தமிழன்டா !!!
பழம்பெருமை பேசினாலும்
புதியபெருமை எழுதினாலும்
புன்னகையோடு சொல்வேன்
நான் தமிழன்டா !!!
அடக்க நினைத்தாலும்
ஒடுக்க பார்த்தாலும்
வெகுண்டு சொல்வேன்
நான் தமிழன்டா !!!
வெறியனென்று சொன்னாலும்
பித்தனென்று பிதற்றினாலும்
சித்தமென்றே சொல்வேன்
நான் தமிழன்டா !!!
எள்ளி நகைத்தாலும்
எக்காளமாய் ஏசினாலும்
இருமார்ப்புடன் சொல்வேன
இன்னிக்காவது என் எழுத்து அச்சிலேறுமா
என் கவலை எனக்கு
இன்னிக்காவது காசு அனுப்புவானா
தந்தையின் கவலை அவருக்கு
மண்ணை நம்பி இருந்தவரு
மகனை நம்பி இருக்காரு...
விதை நெல் வாங்க காசில்லை
விதைச்சாலும் விளைய வாய்ப்பில்லை
ஏர் பிடிச்சு என்ன எழுத வச்சவரு
பிள்ளை தரிசாகி போயிட்டானேன்னு கலங்குனவரு
நிலத்தை முதப்பிள்ளையா நினைச்சு கொஞ்சுனவரு
நிலம் தரிசாகிப் போனதும் பாதி செத்துட்டாரு....
பருவமழை பொய்த்து பல காலமாச்சு
ஆறு குளம் வத்தி கருவேலங் காடாச்சு
ஆத்து மணல் அள்ளுன ஒன்றியம்
ஆறே வருசத்துல அமைச்சராகி போயிட்டாரு
ஒட்டுப்போட்ட சனம் ஒசத்தியா பேசுது
ஒழுகுற வீட்டுல ஓட்டப் பானைய வச்ச