தமிழன்டா
ஆண்டபரம்பரையடா நாங்கள்
அரசகுலமடா எங்களது
ஆணவத்தோடு சொல்வேன்
நான் தமிழன்டா !!!
உதறித் தள்ளினாலும்
உதாசீனப் படுத்தினாலும்
உவகையில் சொல்வேன்
நான் தமிழன்டா !!!
சாதியால் பிரித்தாலும்
மதத்தால் வகுத்தாலும்
சகிக்காமல் சொல்வேன்
நான் தமிழன்டா !!!
பழம்பெருமை பேசினாலும்
புதியபெருமை எழுதினாலும்
புன்னகையோடு சொல்வேன்
நான் தமிழன்டா !!!
அடக்க நினைத்தாலும்
ஒடுக்க பார்த்தாலும்
வெகுண்டு சொல்வேன்
நான் தமிழன்டா !!!
வெறியனென்று சொன்னாலும்
பித்தனென்று பிதற்றினாலும்
சித்தமென்றே சொல்வேன்
நான் தமிழன்டா !!!
எள்ளி நகைத்தாலும்
எக்காளமாய் ஏசினாலும்
இருமார்ப்புடன் சொல்வேன்
நான் தமிழன்டா !!!
வஞ்சனையால் வீழ்த்தினாலும்
தந்திரத்தால் தகர்த்தாலும்
கண்ணீரோடு சொல்வேன்
நான் தமிழன்டா !!!
இத்துணை பெருமையோடும்
எத்துணையும் இன்றி
தனிதத்துவமாய் நிற்பேன்
நான் தமிழன்டா !!!
-தமிழ்நிலவு