ஈழக்குயில்
என் கண்கள் வறண்டு விட்டன
என் கைகள் தளர்ந்து விட்டன
என் கால்கள் முடமாகி விட்டன
என் நாளங்கள் நசிந்து விட்டன
நான் மெல்லச் சாகிறேன் -
என் கனவு மட்டும் சாகவில்லை
என் கனவு நனவாகுமா ??
என் கனவு நனவாகுமா??
ஈழக்குயில் முள்வேலி தாண்டி வருமா
வன்னி வீதிகளில் பறந்து திரிந்திடுமா
யாழ் தேவதைகளை அது பகடி பேசிடுமா
வாளேந்திய வவுனியர்களை வியந்திடுமா
ஈழக்குயிலே நீ என்று வருவாய்???
உயிர்த்திருப்பேனா அது வரையும் ???
- தமிழ்நிலவு