பொங்கல் நல்வாழ்த்துகள்
தமிழர் திருநாளாம் தைப்பொங்கல்
பொங்குக வாழ்வில் இனிமையே
தங்குக தரணியில் வளமையே
ஓங்குக உலகினில் ஒற்றுமையே
ஏங்குக எங்கணும் ஏழ்மையே
பொங்குக வாழ்வில் இனிமையே
தங்குக தரணியில் வளமையே
ஓங்குக உலகினில் ஒற்றுமையே
ஏங்குக எங்கணும் ஏழ்மையே
ஊங்குக திறன்மிகு உழைப்பே
பாங்குக பண்டைப் பயிர்த்தொழிலே
தூங்குக கள்ளும் கயமையும்
மங்குக மனிதருள் மடிமையே
முங்குக முற்றாய் மடமையே
நீங்குக சாதிசமயச் சண்டையே
வீங்குக வீழாச் சமத்துவமே
தாங்குக தலையாய்த் தாயகமே
தேங்குக தண்டமிழ்ப் புகழே
பொங்குக பொங்கல் இல்லந்தோறும் !