ஆணாதிக்கப் பெண் மனது

"தப்பாக இருக்குமோ?
தவறாய்ப் போகுமோ?"
வாழ்வின் எட்டுகள்
ஒவ்வொன்றிலும் இதே பயம்.
உலக இருளில் வழி தெரியாமல்
படு பயங்கரப் பாதாளக் குழிகளில்
விழுந்து விழுந்து எழுந்ததில்
உயிரைப் பறிக்கப் போன
படுகாயங்கள்.
"பசிக்கிறதா? பசிக்கலயா?"
விளங்க முடியாத அளவிற்கு
காயங்களின் வலிகள்.

ஓர் ஈனக் குரலில்
மெதுவாய் முனங்கள்:
"கைப்பிடித்துக் காக்க
காவலாளி (போலீஸ்) எங்காவது....?"
உள்மனது ஓங்கிச் சொன்னது:
"திருடன் கையிலா
சாவியைக் கொடுக்கப் போகிறாய்?".

உள் மனதிற்கு ஓர்
உண்மை சொன்னேன்:
"அப்போ காவலாளி
அல்ல அவன் காவாலி".

"நீதியைத் தேடி நீதிமன்றம்.....?"
என யோசிக்கும் போதே,
"பாபரியைப் போன்றே உன்னையும்
பாகம் பிரிப்பார்கள்
பரவாயில்லையா?"
என்றதோர்....... .
நீதிக்கு இங்கே சமாதி!.

"சரி, காயத்திற்கு ஏதாவது...?"
என மருத்துவனை
நினைக்கும் போது,
மருத்துவமனை சொன்னது:
"காயமா? கர்ப்பமா?".

இத்துனைக்கும் காரணம்
ஆண்கள் தானே!.
"ஆணாதிக்கம்!" என்றேன்.

"பெண்களே வெகுண்டெழுங்கள்
ஆணாதிக்கம் அழிய -
ஆண்களைப் போன்றே
நாமும்.....".
உரத்து முழங்கினேன்.

உரைத்தது பெண் ர்க்கத்திற்கு
உறைந்தது ஆண் வர்க்கம்.

பெண்கள் களமிறங்க-
ஆண்களும் களமிறங்கினர்.
எதிலே......?.
.......தொடரும்......

எழுதியவர் : அ.நௌசாத் அலி (10-Jan-15, 9:22 am)
சேர்த்தது : நௌசாத் அலி
பார்வை : 191

மேலே