நௌசாத் அலி - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : நௌசாத் அலி |
இடம் | : திண்டுக்கல் |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 03-Dec-2014 |
பார்த்தவர்கள் | : 83 |
புள்ளி | : 8 |
இந்தக் கவிதையை
எழுதிக் கொண்டிருக்கிறது
இந்தப் பேனா !
இந்தக் கவிதையை
எழுதிக்கொண்டிருக்கிறது
இந்தக் கை !
இந்தக் கவிதையை
எழுதிக்கொண்டிருக்கிறது
இந்தச் சிந்தனை !
இந்தக் கவிதையை
எழுதிக்கொண்டிருக்கிறான்
இந்த மனிதன் !
என
இவ்வாறாக
இந்தக் கவிதையை
எழுதிக்கொண்டிருக்கிறது
இந்தப் பிரபஞ்சம் !
கண்டுகொண்டேன் (சுய)நலத்தை!
“அப்பா நீங்களே இப்படி இருந்தா எப்படி? முதல்ல வாங்க, நீங்க தைரியமா இருந்தாதானே மத்ததெல்லாம் நல்லபடியா நடக்கும். வாங்கப்பா, வந்து சாப்பிடுங்க. ரெண்டுநாளா நீங்க பட்டினி கிடந்தால எல்லாம் சரியா போச்சா? வாங்க .. ம்ம்ம்..” என்று இழுத்துச்சென்ற மகனோடு செல்லும்போது ஒருமுறை திரும்பி மனைவியை பார்த்தேன், மனைவியின் நிலைகுத்திய பார்வை ஊசியாய் குத்தியது என்னை.
வார்த்தைகளை விட மிகவும் தாக்கிய பார்வை. இரண்டு நாட்களாக ஒவ்வொரு நிமிடமும் எனக்கு வலியை வெவ்வேறு வகைகளில் உணர்த்திய நிமிடங்கள்.
கை தன்னிச்சையாக வாயிற்கு எடுத்துச்சென்ற உணவு ருசிக்கவில்லை. மீண்டும்மீண்டும் நிலைக்குத
காதலர் தினம்
காதலர்களுக்கான தினம்
தப்பில்லை – தப்பு
உன் காதலில்...
கண்டதும் காதல்
பார்த்ததும் காதல் என...
இரட்டை ஜடை பின்னல்
எதிர் வீட்டு ஜன்னல் என...
காதலித்து பார்.
பெற்ற பிள்ளையாய் பெற்றோரை..
நன்மாணவனாய் ஆசானை..
உயிர் தோழமையாய் நண்பர்களை..
இரத்த பந்தமாய் உடன்பிறப்பை..
புத்தாடையாய் துணையை..
நல்லுறவாய் சொந்தங்களை..
ஆதரவாய் அனாதைகளை..
அக்கறையாய் சமூகத்தை..
மாசற்றதாய் மார்கத்தை
நல்லடியானாய் இறைவனை...
உற்ற இடத்தில் வை
உன் காதலை..
இன்று மட்டுமல்ல
என்றென்றும் உனக்கு
காதலர் தினம்
திரு.கவியரசன் புதுவிதி செய்வோம் அவர்களின் தலைப்பினை அவர் அனுமதி இல்லாமல் பயன் படுத்தியமைக்கு முதலில் மன்னிக்கவும்......
வாழ்க்கையின் நிலையற்ற தன்மை குறித்த மனிதனின் பயம்
அடுத்த நொடி என்னவாகும் என்று யாருக்கும் விளங்காத தன்மை
இவைகள் முதலில் மனிதன் கடவுளை தோற்றுவிக்க காரணமாக இருந்து
இருக்கலாம்.இதனுடன் மக்களை நெறிப் படுத்தும் கொள்கைகளையும் சேர்த்துக் கொண்டு மதங்கள் உருவாகி இருக்கும் .
1. நல்லவழி படுத்த தோற்றுவிக்க பட்ட மதங்கள்,அதற்கு பயன்படுத்தப் பட்டு இருந்தால் இன்று சிறையில் இருக்கும் கைதிகள் பலர் கடவுளை நம்பக்கூடியவர்களாக இருக்க, அவர்களின் நடைமுறை கெட்ட விதமாகஇருக்
அழகு யுவதி ஒருத்தி
ஆயிரம் புன்னகை
அள்ளி வீசி,
பாதையைக் கடக்கிறாள்.
பாதசாரி இளைஞன் ஒருவன்
பாதையைக் கடக்கும் வேளையில்
கண்ணருகில் நிற்கிறாள்.
காதலாய்ப் பார்க்கிறான்.
திரைக்குள்ளிருக்கும்
கன்னியவளைக் கண்டுகளிக்க
கள்ளன் அவனுக்குக்
கொள்ளை ஆசை.
அருகே சென்று
அன்பாய்ப் பேசுகிறான்:
"கண்ணே!
திரையை விலக்கு.
கண்டுகளிக்க
காதலன் வந்துள்ளேன்."
அவனது பரதேசிக் கோலத்தை
மேலும் கீழுமாய்
திரைக்குள்ளிருந்து
நோட்டம் விடுகிறாள்.
அலட்சியம் செய்துவிட்டுப்
போய்விடுகிறாள்.
பேசாத அவளது வார்த்தைகள்
அவனை என்னவோ செய்கிறது.
° ° ° ° ° ° ° ° ° ° ° ° ° ° °
காதல
என்னை நினைத்து
நீ விடும் மூச்சுக் காற்று,
என்னை உன் பக்கம்
இழுக்கிறது.
நான் காற்றில்லா
சந்திரனில்
இருந்த போதிலும்!
"தப்பாக இருக்குமோ?
தவறாய்ப் போகுமோ?"
வாழ்வின் எட்டுகள்
ஒவ்வொன்றிலும் இதே பயம்.
உலக இருளில் வழி தெரியாமல்
படு பயங்கரப் பாதாளக் குழிகளில்
விழுந்து விழுந்து எழுந்ததில்
உயிரைப் பறிக்கப் போன
படுகாயங்கள்.
"பசிக்கிறதா? பசிக்கலயா?"
விளங்க முடியாத அளவிற்கு
காயங்களின் வலிகள்.
ஓர் ஈனக் குரலில்
மெதுவாய் முனங்கள்:
"கைப்பிடித்துக் காக்க
காவலாளி (போலீஸ்) எங்காவது....?"
உள்மனது ஓங்கிச் சொன்னது:
"திருடன் கையிலா
சாவியைக் கொடுக்கப் போகிறாய்?".
உள் மனதிற்கு ஓர்
உண்மை சொன்னேன்:
"அப்போ காவலாளி
அல்ல அவன் காவாலி".
"நீதியைத் தேடி நீதிமன்றம்.....?"
என யோசிக்கும் போதே,
"பாபரியைப் போன்றே உன
என்னை நினைத்து
நீ விடும் மூச்சுக் காற்று,
என்னை உன் பக்கம்
இழுக்கிறது.
நான் காற்றில்லா
சந்திரனில்
இருந்த போதிலும்!
காதலியே! உன் சிரிப்பு
குறிஞ்சிப் பூவானதேனோ?
உன் முகப் பூங்காவனம்
காய்ந்த புல்லானதேனோ?
மகிழ்ச்சியுடன் விளையாடிய உனக்கு அதனுடன் விரோத,குரோதங்கள்
உண்டானதேனோ?
உனைத் தீண்டிய காற்று
தென்றலானதை நினைத்துப் பார்க்கிறேன்.
இப்போது புயலாவதையும்
எண்ணிப் பார்க்கிறேன்.
அடிக்கடி கோபித்துக் கொள்ளும்
அழகிய நிலவு நீ!.
அன்பே! உன்னுடன் தான்
எத்தனை ஆச்சரியங்கள்
சாதாரணமாய் சண்டையிடுகின்றன!.
உனைப் பார்ப்பதே
நான் எனக்குள்
நடத்திக் "கொல்லும்"
போராட்டமடி!.
என்னுள் காதல் தீ!.
மூட்டியது நீதானடி!.
உங்களுக்கு தெரியாது .
நான் வாழ்க்கையில் எத்தனை முறை விழுந்து இருக்கிறேன் தெரியுமா ?
கணக்கில் அடங்காது ....
ஒவ்வொரு முறை விழுந்த போதும் உலகம் என்னை பார்த்து சிரித்தது ...
ஆனால் நான் அதை பொருட்படுத்தியதே இல்லை .
நானாக ஊன்றினேன் ...
எழுந்து நின்றேன் ...
நடந்தேன் ...
அடைந்தேன் .
அடைந்து " இன்னொரு கட்டிங் கொடுங்க " என்றேன் டாஸ்மாக்கில்.