கோட்டாறு ஷிபான் அரூஸி - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : கோட்டாறு ஷிபான் அரூஸி |
இடம் | : இடலாக்குடி , கோட்டார், நாக |
பிறந்த தேதி | : 15-Jun-1988 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 10-Aug-2014 |
பார்த்தவர்கள் | : 334 |
புள்ளி | : 10 |
வெடித்தல்
புதுமைகளின் பிறப்பிடம்,
வெடித்தலின் பயன் பிறப்பு,
புதுமை அதன் சிறப்பு!
அணு வெடிப்பில் ஆற்றல்,
பெரும் வெடிப்பில் அண்ட சராசரம்,
கன்னி வெடித்து தாய்மை,
கரு வெடித்து குழந்தை,
வான் வெடித்து மழை,
நிலம் வெடித்து பயிர் ,
விதை வெடித்து மரம்,
சொல் வெடித்து மொழி,
சிந்தை வெடித்து அறிவியல்,
வெடித்தலின் நோக்கம் ஆக்கம்
அழிவு அதன் தாக்கம்.
ஆபத்து நிறைந்த அணுகுண்டு போல,
அழிக்கப்படும் பெண் சிசு போல,
கூடங்குளம் அணு போல
டெல்டா மண் (மீ)தேன் போல...
வெடித்தலை நமதாக்குவோம்,
புதுப்படைத்தலை உருவாக்குவோம்...
மண் பயனுற வேண்டும்.
காதலர் தினம்
காதலர்களுக்கான தினம்
தப்பில்லை – தப்பு
உன் காதலில்...
கண்டதும் காதல்
பார்த்ததும் காதல் என...
இரட்டை ஜடை பின்னல்
எதிர் வீட்டு ஜன்னல் என...
காதலித்து பார்.
பெற்ற பிள்ளையாய் பெற்றோரை..
நன்மாணவனாய் ஆசானை..
உயிர் தோழமையாய் நண்பர்களை..
இரத்த பந்தமாய் உடன்பிறப்பை..
புத்தாடையாய் துணையை..
நல்லுறவாய் சொந்தங்களை..
ஆதரவாய் அனாதைகளை..
அக்கறையாய் சமூகத்தை..
மாசற்றதாய் மார்கத்தை
நல்லடியானாய் இறைவனை...
உற்ற இடத்தில் வை
உன் காதலை..
இன்று மட்டுமல்ல
என்றென்றும் உனக்கு
காதலர் தினம்
வெடித்தல்
புதுமைகளின் பிறப்பிடம்,
வெடித்தலின் பயன் பிறப்பு,
புதுமை அதன் சிறப்பு!
அணு வெடிப்பில் ஆற்றல்,
பெரும் வெடிப்பில் அண்ட சராசரம்,
கன்னி வெடித்து தாய்மை,
கரு வெடித்து குழந்தை,
வான் வெடித்து மழை,
நிலம் வெடித்து பயிர் ,
விதை வெடித்து மரம்,
சொல் வெடித்து மொழி,
சிந்தை வெடித்து அறிவியல்,
வெடித்தலின் நோக்கம் ஆக்கம்
அழிவு அதன் தாக்கம்.
ஆபத்து நிறைந்த அணுகுண்டு போல,
அழிக்கப்படும் பெண் சிசு போல,
கூடங்குளம் அணு போல
டெல்டா மண் (மீ)தேன் போல...
வெடித்தலை நமதாக்குவோம்,
புதுப்படைத்தலை உருவாக்குவோம்...
மண் பயனுற வேண்டும்.
DEC 31 - டிசம்பர் 31
"""""""""""""""""""""""""""
எல்லோர் முகத்திலும்
புத்தாண்டின் பூரிப்பு...
ஆனால்,
பழைய நாள்காட்டிக்கு மட்டும்
நிலைகொள்ள வில்லை.
ஆம், மரணம் வரும் நேரம்
தெரிந்தால் மனது எப்படி அமைதி பெரும்...
ஒவ்வொன்றாய் கிழிக்கப்பட்டு
ஒன்றே ஒன்று மட்டும் இறுதியாய் ...
விடிந்து விட்டால் அதுவும் விழுந்துவிடும்
புரியவில்லை,
இது புத்தாண்டின் ஜனனமா?
அல்லது நடப்பாண்டின் மரணமா?
கடந்து வந்து காணுகிறோம்
காணவில்லை,
பதித்து வந்த தடங்களை...
காலமும் கரையும்
இருக்கும் வரை
பதிய வைப்போம் புதிய பாதங்களை...
''அனுபவம் புதுமை''