காதலர் தினம்
காதலர் தினம்
காதலர்களுக்கான தினம்
தப்பில்லை – தப்பு
உன் காதலில்...
கண்டதும் காதல்
பார்த்ததும் காதல் என...
இரட்டை ஜடை பின்னல்
எதிர் வீட்டு ஜன்னல் என...
காதலித்து பார்.
பெற்ற பிள்ளையாய் பெற்றோரை..
நன்மாணவனாய் ஆசானை..
உயிர் தோழமையாய் நண்பர்களை..
இரத்த பந்தமாய் உடன்பிறப்பை..
புத்தாடையாய் துணையை..
நல்லுறவாய் சொந்தங்களை..
ஆதரவாய் அனாதைகளை..
அக்கறையாய் சமூகத்தை..
மாசற்றதாய் மார்கத்தை
நல்லடியானாய் இறைவனை...
உற்ற இடத்தில் வை
உன் காதலை..
இன்று மட்டுமல்ல
என்றென்றும் உனக்கு
காதலர் தினம்