டிசம்பர் 31
DEC 31 - டிசம்பர் 31
"""""""""""""""""""""""""""
எல்லோர் முகத்திலும்
புத்தாண்டின் பூரிப்பு...
ஆனால்,
பழைய நாள்காட்டிக்கு மட்டும்
நிலைகொள்ள வில்லை.
ஆம், மரணம் வரும் நேரம்
தெரிந்தால் மனது எப்படி அமைதி பெரும்...
ஒவ்வொன்றாய் கிழிக்கப்பட்டு
ஒன்றே ஒன்று மட்டும் இறுதியாய் ...
விடிந்து விட்டால் அதுவும் விழுந்துவிடும்
புரியவில்லை,
இது புத்தாண்டின் ஜனனமா?
அல்லது நடப்பாண்டின் மரணமா?