பிணந்தின்று வளர்ந்த புழுக்கள்
![](https://eluthu.com/images/loading.gif)
கல்விக்கண் திறக்க
பள்ளி அனுப்பினால்
சொல்லிதருபவனோ தன்
காமக்கண் திறந்து
காத்து கிடக்கிறான்!
கல்வி கூடம் செல்லும்
பட்டாம் பூச்சிதனை
பள்ளியறை இழுத்து
இறகு பிய்க்க
இரு விழி திறந்து கிடக்கிறது
தாயின் பிணந்தின்று
வளர்ந்த புழுக்கள்
ஏதுமறியா இன்முகத்தில்
இறைவனை காணாமல்!
தனக்கு இரையாக கண்டிருக்கிறான்!
இவன் தாய் பேய் கூடி
இவனை பெற்றேடுத்தாளோ
இவன் இறந்தோரின்
பிறப்புறுப்பை
தின்று வளர்ந்தவனோ?
பெண் பிள்ளை பெற்றவனின்
புண் மனம் திடம் பெற!
கல் மனம் கொண்டவன்
உள் மனம் பயம் பெற!
நகரத்தின் நடுவினிலே!
பெருமக்கள் திரளினிலே!
இவன் பிறப்புறப்பை பிய்த்து
இவன் பின் தனை சிதைத்து
கரம் தனை அறுத்து
கால்களை முடமாக்கி
ஏனைய உறுப்புகளை கொய்து
முதுகெலும்பை பொடியாக்கி
தலை தனை தரை தேய்த்து
உயிரை பறிக்கும் சட்டம் தனை தந்து - அதனை
ஏதோ ஒரு சாமானியன் கூட நிறைவேற்றும் நிலை வேண்டும்!
இவன் இறப்பின் அலறலும்
மரணத்தின் ஓலமும்
இனி வரும் சமுதாயத்தில்
எஞ்சிய இழி மகன்களின்
இடுகாடு காலம் வரை
தளிர்களை பறிக்கும் எண்ணம்
தலை தூக்காமல் தடுக்க வேண்டும்!