குழந்தைகளோடு நான்
சில தருணங்கள்
சிலாகித்து தான் போகிறோம்,
தனிமை எத்துனை சூழ்ந்திருந்தாலும்...
சொல்லாமல் சேருகிற
சொந்தங்கள்,
ஏதோ சொல்லி வைத்தாற்போல்....
அசல் நினைவுகளின்
அச்சுப்பிரதிகள்...
யார் எழுதியதோ?
மகிழ்ச்சியையே மை ஆக்கியுள்ளான்...!
பக்கங்கள் புரட்ட முடியா
பெரிய புத்தகம் போல,
பிஞ்சுகள் கண்ட நெஞ்சம்
மழலையோடு தஞ்சம் - கொண்ட
அந்த கனப்பொழுதுகள்...
கால் ஒட்டிய கடல் மண் போல்
ஓர் ஆத்ம ஸ்பரிசம்...
நீர் விட்டு வெளி வந்தும்
நனைந்து கொண்டிருக்கும்
நினைவுகளோடு,
என் கண்களும்!
தேடல்களுடன்...