மதங்கள் என்ன செய்தது குப்பையில் கொட்ட பாகம் 2

திரு.கவியரசன் புதுவிதி செய்வோம் அவர்களின் தலைப்பினை அவர் அனுமதி இல்லாமல் பயன் படுத்தியமைக்கு முதலில் மன்னிக்கவும்......

வாழ்க்கையின் நிலையற்ற தன்மை குறித்த மனிதனின் பயம்
அடுத்த நொடி என்னவாகும் என்று யாருக்கும் விளங்காத தன்மை
இவைகள் முதலில் மனிதன் கடவுளை தோற்றுவிக்க காரணமாக இருந்து
இருக்கலாம்.இதனுடன் மக்களை நெறிப் படுத்தும் கொள்கைகளையும் சேர்த்துக் கொண்டு மதங்கள் உருவாகி இருக்கும் .

1. நல்லவழி படுத்த தோற்றுவிக்க பட்ட மதங்கள்,அதற்கு பயன்படுத்தப் பட்டு இருந்தால் இன்று சிறையில் இருக்கும் கைதிகள் பலர் கடவுளை நம்பக்கூடியவர்களாக இருக்க, அவர்களின் நடைமுறை கெட்ட விதமாகஇருக்க இந்த மதம் செய்தது என்ன??மாற்றியதா அவர்களை ??
2.புனிதமும்,தீட்டும் வகுத்தது எது?
சக மனிதனை தீண்ட தகாதவன் இவன் என மாற்றியது எது ?
இதை படைத்த நானே மாற்ற முடியாது என்று சொல்கிற கடவுளை அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டிய அவசியம் என்ன?

3.தனி மனித ஒழுக்கம் அனைவருக்கும் வேண்டும் .
ஆனால்,கடவுளின் தூதர்களாக ,இடைத்தரகர்களாக இருக்கின்ற சாமியார்களும்,பாதிரியார்களும் நடந்து கொள்ளும் முறைகள் இந்த சமூகம் காணத் தானே செய்கிறது.

4.மத நம்பிக்கைகளுடன் ,அண்ணன் தம்பி உறவாக ஒட்டிக் கொள்ளும் மூட நம்பிக்கைகளுக்கு தூபம் இடுவது மத நம்பிக்கை தானே?

சென்ற வார தினகரன் நாளிதழில் 'வசிகரன் தாயத்து' என்று ஒரு விளம்பரம்
அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு தரும் என்று பணம் பறிக்கும் மோசடி .............

இதனை ஒரு நாத்திகவாதியை நம்ப சொல்லுங்கள் பார்க்கலாம்.

இன்னும்

ஜோதிடமாம் ,வானியல் அறிவியலாம்.........

வீடு கட்ட அதனை பார்த்தால் கூட பரவாஇல்லை .டக்ஸ் கட்ட சம்பந்தப் பட்ட அதிகாரி இன்னைக்கு நான் வாங்க மாட்டேன்.நாள் நல்லா இல்லை என்றால் ...........இதை எங்கு கொண்டு சொல்வது ...இது சமூக அவலம் தானே...........

சூரியன் ஒரு கோள் என்று இன்றும் இந்த வானியல் அறிவியல் [ஜோதிடம் ]தான் சொல்லுகிறது..........

5.கஷ்ட படாமலே ,உடனே எல்லாம் கிடைத்துவிட வேண்டும் என்ற மனிதனின் அவசரம்........
12 வகுப்பு மாணவி எப்போதும் பைபிள் கையில் வைத்துக் கொண்டு ,ஜெபித்து கொண்டு பாடங்கள் படிக்க தவறி ஏசப்பா எனக்கு மார்க் தருவார் என்று சொல்கிறதே??

நீ படிச்சா மார்க் வாங்கலாம் என்று சொல்லுகிற தகுதி நாத்திக வாதிக்கு தான் உண்டு.....
ஏனெலில் எல்லாத்தையும் அவர் பார்த்துக் கொள்வார் என்று சொல்லுவதே ஆன்மீகவாதிகள் தானே.

6.IAS அதிகாரி ஜெபம் செய்தால் எல்லாம் கிடைக்கும் என்கிறார்.
'மங்கல்யான்'அனுப்பின விஞ்ஞானி சாமி கும்பிட்டு,தேங்காய் உடைத்து ............
இதுல செயற்கைக்கோள் சுற்றுவட்ட பாதையில் போகும் போது அவர் பார்க்க மாட்டாராம் .......
அது செண்டிமேண்டாம்........அவருக்கு .

இதை பகுத்தறிவாதி விட்டால் யார் கேட்க முடியும்?

7.நடக்கிற விபத்து இவன் ஆன்மீகவாதியா?
நாத்திகனா? என்று பார்ப்பதே இல்லை ......சாவு என்றால் அது எல்லோருக்கும் பொதுவானது.........
பயந்தால் சாவு வராமலா இருக்க போகிறது???

8.சர்க்கரை நோய் உள்ள நோயாளி காலில் புண் வந்து காலை எடுக்கும் நிலை.
அப்போது வந்து,ஐயா இந்த காலால் தான் நான் நடந்தேன் ......எனக்கு இந்த கால் இது வரை நன்மையே செய்தது .....நான் செத்தா கூட இந்த காலை எடுக்க விட மாட்டேன் என்றால்............

அது எவ்வளவு அபத்தமானதோ ,அவ்வளவு அபத்தமானது மதங்கள் வேண்டும் என்பது................

9.மதங்களுக்கு நாத்திகவாதி மிக பெரிய எதிரி ....இது சத்தியமான உண்மை......

ஆனால்,
துரோகி யார் தெரியுமா?

ஆன்மீக வாதி...............

கடவுளே 'என் வீடு' 'என் சொத்து' எல்லாத்தையும் பார்த்துக் கொள் என்று கும்பிட்டு விட்டு
'நடையை சாத்தும்' போது கடவுள் மீது நம்பிக்கை இல்லாமல் பெரிய பூட்டு போட்டு கோவில் கதவை அடைக்கிறான்.

நோய் வந்தால் நேரே மருத்துவமனைக்கு போகிறான் .எப்படியாவது காப்பாற்றுங்கள் என்று டாக்டர் கிட்ட சொல்கிறான்.

யார் துரோகி

நீங்களா?நானா?

குறிப்பு:
இது அனைவர் மனதையும் புண் படுத்தினால் மன்னிக்கவும்.

இதை,படிக்கும் போது கோபம்,ஆத்திரம் வரும் ............

ஆனால்,

எனது கொள்கை தான் இந்த உலகை ஆள வேண்டும் என்ற வெறி எனக்கு கிடையவே கிடையாது.
மனிதனின் அடுத்த கட்ட இலக்கிற்கு ,போக்கிற்கு மதங்கள் தடையாக உள்ளனவே என்ற எண்ணம் மட்டும் தான் உள்ளது............

எழுதியவர் : கௌதமி தமிழரசன் (3-Feb-15, 7:39 pm)
சேர்த்தது : gowthami
பார்வை : 374

மேலே