இந்தக் கவிதையை எழுதிக்கொண்டு
இந்தக் கவிதையை
எழுதிக் கொண்டிருக்கிறது
இந்தப் பேனா !
இந்தக் கவிதையை
எழுதிக்கொண்டிருக்கிறது
இந்தக் கை !
இந்தக் கவிதையை
எழுதிக்கொண்டிருக்கிறது
இந்தச் சிந்தனை !
இந்தக் கவிதையை
எழுதிக்கொண்டிருக்கிறான்
இந்த மனிதன் !
என
இவ்வாறாக
இந்தக் கவிதையை
எழுதிக்கொண்டிருக்கிறது
இந்தப் பிரபஞ்சம் !