வஞ்சம் செய்தாயடா ………
பங்குனி மாத வளர்ப்பிறையில்
பல பேர்க் கூடியிருக்க
பத்து மாதத் தாமரையொன்று
பவளமாக மலர்ந்தது
பரவசமாக உன்னை கையில் ஏந்தி
பல கோடி சந்தோஷப்பட்டேன் என் செல்வமே
படிப்பறிவில்லாத எனக்கு உன்
பச்சிளம் விரல் கொண்டு சொல்லிக்கொடுக்கும் போது
பட்டக்கஷ்டமெல்லாம் பஞ்சா பறக்குதடா
பட்டினிகிடந்து உன்னை படிக்க வைத்ததற்கு
பலர்ப்போற்ற வளரும் போது பெறுமைப்பட்டேன் என் கண்ணே
ஒரு சொட்டு தண்ணீர் சம்பாதிக்க
ஓராயிரம் வியர்வை போகுதடா
உன் மேல் வைத்த நம்பிக்கை
உப்பு போல் கரைந்ததடா
மலைப் போல் நம்பிய உன்னை
மறைந்திருந்து வஞ்சம் செய்தாயடா
கால்காசு சம்பாதிக்கும் முன்பே
காதலில் விழுந்தாயடா
கண் முன் இருக்கும் நிஜத்தை மறந்து
கனவு உலகில் மிதக்குறாயடா
காலம் முழுவதும் கேலிப்பேச்சிக்கு ஆளாக்கி – எங்களை
கண்கலங்க வைத்தாயடா
ஆண்மகன் என்று எண்ணிய நீ
அடிமைப்பட்டுப் போனாயடா காமத்திற்கு
அருகாமையில் இருக்கும் சொந்தத்தைவிட்டு
அடிமைப்பட்டுப் போனாயடா சொல்ப்பேச்சிக்கு
ஆறறிவற்ற மிருகம் போல்
அடிமைப்பட்டுப் போனாயடா ஆசைக்கு
உன்னை சபிக்க மனமில்லையடா
உண்ட உணவும் செரிக்க மறுக்குதடா
உருகினேனடா மெழுகுவர்த்தியைப் போல்
உழைப்பின்றி ஒளிப்பெற்று உதாசினப்படுத்திப் போனாயடா
ஊட்டி வளர்த்தத் தாய்க்கு
ஊரறியப் பால் ஊற்றிச் சென்றாயடா
உண்மையாக இருந்த எங்களுக்கு
உன் காதல் தந்தப் பரிசு அவமானம் மட்டும் தான்டா …………..!