மூண்ட தீ - நீ

காதலியே! உன் சிரிப்பு
குறிஞ்சிப் பூவானதேனோ?
உன் முகப் பூங்காவனம்
காய்ந்த புல்லானதேனோ?
மகிழ்ச்சியுடன் விளையாடிய உனக்கு அதனுடன் விரோத,குரோதங்கள்
உண்டானதேனோ?

உனைத் தீண்டிய காற்று
தென்றலானதை நினைத்துப் பார்க்கிறேன்.
இப்போது புயலாவதையும்
எண்ணிப் பார்க்கிறேன்.

அடிக்கடி கோபித்துக் கொள்ளும்
அழகிய நிலவு நீ!.

அன்பே! உன்னுடன் தான்
எத்தனை ஆச்சரியங்கள்
சாதாரணமாய் சண்டையிடுகின்றன!.

உனைப் பார்ப்பதே
நான் எனக்குள்
நடத்திக் "கொல்லும்"
போராட்டமடி!.

என்னுள் காதல் தீ!.
மூட்டியது நீதானடி!.

எழுதியவர் : அ.நௌசாத் அலி (10-Jan-15, 8:28 am)
சேர்த்தது : நௌசாத் அலி
பார்வை : 43

மேலே