தவம்
பஞ்சு பிரிச்சு பிழைக்க வச்ச தாயே
நெஞ்சு வலிக்குதுனு சொல்லாம போயிட்டியே
நட்டாத்துல விட்டுட்டு போகலாமா
நீந்தவும் தெரியல எனக்கு சாகவும் தெரியலம்மா
கோழிக் குஞ்சு தலமேல
கம்மாயில காத்திருந்து நிக்கையில
பருந்து குஞ்செடுத்துட்டு போகிட்டா
பத்தே மாசத்துல பிள்ள பிறக்கும்
கூறுகெட்ட குறிகாரன் எவனோ சொல்ல
காத்துக்கிடந்தாயே கம்மாயில
எனக்காக நீ எதுவும் செய்யாமலில்லை
உனக்காக நான் எதுவுமே செய்யலையே
தவமிருந்து பெத்த பிள்ளையம்மா நான் உனக்கு
தனியே தவிக்க விட்டது தான் நியாயமா உனக்கு ?
வாக்கப்பட்டது தான் வீனாப்போனதுனா
வயித்தில் பிறந்ததும் விளங்காமப் போனதாயிருந்தா
என்ன பாடுபட்டிருக்கும் உன் மனசு
எப்பவும் கலங்கியதில்லையே இத நினச்சு
ஈன்ற பொழுதினும் பெரிதுவைக்க நீ இல்லை தாயே
இனி நான் சான்றோன் ஆனாத்தான் என்ன
சாக்கடையாகிப் போனாத்தான் என்ன ????
- தமிழ் நிலவு