ARUMBOOR GURU - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : ARUMBOOR GURU |
இடம் | : mayiladuthurai |
பிறந்த தேதி | : 06-Mar-1983 |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 01-Oct-2021 |
பார்த்தவர்கள் | : 46 |
புள்ளி | : 6 |
நல்ல வாசகன்...எழுத்து,ஓவியம் முதலான கலைகளில் ஆர்வம் உண்டு..இப்போது கரையில் கால் பதிந்து நின்கிறேன்...எதிர்காலத்தில் கலைக்கடலில் மூழ்கி முத்தெடுக்க தங்கள் ஆதரவை கோரி தமிழன்னையின் தாள் பணிந்து நிற்கிறேன் .
'பெயருக்கே பெரியக்கட்சி-அது
பிதற்றல் கூட்டம்
சிதறும் தொண்டர்களுக்கு
சிபிக்கூட்டம் நாமே.!'
முழங்கினார் தலைவர்.
உடைந்து வந்த கூட்டத்தை
முற்றிலும் சேர்த்துக்கொள்ள
விடைத்த காது ஒட்டுக்கேட்க
விரைந்த வேட்டி சரசரக்க
கனல் பேச்சு சுழன்றடிக்க
அனல் பற்றி எரியும் விழா
உடைந்த சோடாப்புட்டியோடு
ஓடிவந்த தொண்டர் ஏற-மேடை
சாய்ந்த நேரம் சினம் கொண்டு
சாரம் கட்டிய தச்சரை பார்த்து
காரம் கூட்டி கடுப்படித்தார் தலைவர்
'பாரம் தாங்கும் பத்துக்கெல்லாம்
உடைந்தகழி உதவாதே...
உமக்கு அது உறைக்காதோ..?!'♦
♥மிரட்டும் பெரும் பேய் மேகக்கூட்டம்
புரட்டும் பெருங்காற்றும் வரக்கூடும்
கூரையில்லா வீட்டுக்
குழந்தைகளின் குதூகலம் தொலைய வேண்டாம்....
கூடுல்லா பறவைகளின் கூக்குரலும் எழவேண்டாம்...
விதைத்தவன் வெள்ளாமை வீடுவந்து விழவேண்டும்...
புதுநெல் வாசம் பிடித்து பூரிப்பில்தான் அவன் அழவேண்டும்..
பூமியை தாலாட்டும் கான மழை போதும்...கனமழை வேண்டாம்...
உன் பூப்பாதம் பெயர்த்து அவிழ்ந்த கூந்தலோடு வீதியுலா வாயேன் நீ...
உன் கூந்தல் கோதும் ஆவலிலாவது மூர்க்கம் துறந்து
தென்றலாய் தேசம் கடந்து
போகட்டுமே புயல்.!♥
♥மிரட்டும் பெரும் பேய் மேகக்கூட்டம்
புரட்டும் பெருங்காற்றும் வரக்கூடும்
கூரையில்லா வீட்டுக்
குழந்தைகளின் குதூகலம் தொலைய வேண்டாம்....
கூடுல்லா பறவைகளின் கூக்குரலும் எழவேண்டாம்...
விதைத்தவன் வெள்ளாமை வீடுவந்து விழவேண்டும்...
புதுநெல் வாசம் பிடித்து பூரிப்பில்தான் அவன் அழவேண்டும்..
பூமியை தாலாட்டும் கான மழை போதும்...கனமழை வேண்டாம்...
உன் பூப்பாதம் பெயர்த்து அவிழ்ந்த கூந்தலோடு வீதியுலா வாயேன் நீ...
உன் கூந்தல் கோதும் ஆவலிலாவது மூர்க்கம் துறந்து
தென்றலாய் தேசம் கடந்து
போகட்டுமே புயல்.!♥
கால மாற்றம்
ஒத்தை பிள்ளை பெத்த
உத்தமி-உலகம்மை
உரிச்சோறு கிடைக்குமுன்னு
உரிமையோட வளர்த்தாளோ-இல்ல
கறிச்சோறு கிடைக்குமுன்னு
கனாக்கண்டு மலர்ந்தாளோ.!
கால்நீட்டி கண்ணீர் வழிய இப்பவும்
இடிஞ்சி போயி ஒக்காந்திருக்கா கிழவி
ஒடிஞ்சி போன குத்துவிளக்கா
ஒத்த விளக்கா-இருந்தும் இல்லாத
செத்த விளக்கா..
மாரியார் கொடுமைன்னு ஊர் சொல்லுது
மருமகள் கொடுமையை யாரிடம் சொல்வது
கிழவி 'தாக்கல்'ஊர் அம்பலம் ஏறுமோ.?
ஒத்த மகனை மத்தளமாக்க பொறுக்காம
ஒரலாகிப்போனா-ஒலகம்மை
செத்தநாக்கு சிவனேன்னு கிடக்கா
'சொல்'லை இரைக்கிறதுலயும்..
சுவையா ருசிக்கிறதுலயும்...
ஏதோ கொஞ்சம் தூக்கல் தான்-உப்பு
ஏழைப்பங்காளன்-சிறுகதை
******""********
"என்னப்பா..முகிலா.!..உனக்கு ஏது இவ்வளவு பணம்.!.."தலைமையாசிரியர் கேட்க...கையில் இருந்த கற்றை ரூபாய் நோட்டுகளையும் நெஞ்சோடு அணைத்தபடி தலை நிமிர்ந்து பார்த்தான்.
கண்களில் மிரட்சியும் ..பெருமிதமும் மாறி மாறி தாளமிட ..."அது ...வந்து சார்..நான் குப்பை பொறுக்கி விற்று அதுல சேமித்த பணம் சார்...நம்ம பள்ளிக்கூடத்துக்கு கழிவறை கட்டிடம் கட்ட கலெக்டர் ஐயாகிட்ட தரனும் சார்.!"என்றான்.
"அடேய்...என்னடா உலறுற...குப்பை பொறுக்கி வித்தியா...அதுல இவ்வளவு பணமா.?எங்களுக்கு காது குத்தறதுமில்லாம...கலெக்டர் ஐயா முன்னால பள்ளிக்கூடத்து பேரை கலங்கப்படுத்த பார்