உமக்கு உறைக்காதோ

'பெயருக்கே பெரியக்கட்சி-அது
பிதற்றல் கூட்டம்
சிதறும் தொண்டர்களுக்கு
சிபிக்கூட்டம் நாமே.!'
முழங்கினார் தலைவர்.

உடைந்து வந்த கூட்டத்தை
முற்றிலும் சேர்த்துக்கொள்ள
விடைத்த காது ஒட்டுக்கேட்க
விரைந்த வேட்டி சரசரக்க
கனல் பேச்சு சுழன்றடிக்க
அனல் பற்றி எரியும் விழா

உடைந்த சோடாப்புட்டியோடு
ஓடிவந்த தொண்டர் ஏற-மேடை
சாய்ந்த நேரம் சினம் கொண்டு
சாரம் கட்டிய தச்சரை பார்த்து
காரம் கூட்டி கடுப்படித்தார் தலைவர்
'பாரம் தாங்கும் பத்துக்கெல்லாம்
உடைந்தகழி உதவாதே...
உமக்கு அது உறைக்காதோ..?!'♦

எழுதியவர் : அரும்பூர் குரு (15-Oct-21, 8:13 pm)
சேர்த்தது : ARUMBOOR GURU
பார்வை : 62

மேலே