Abi Abi - சுயவிவரம்
(Profile)
![](https://eluthu.com/images/userimages/f4/ipfjx_48695.jpg)
![](https://eluthu.com/images/roles/newer.png?v=5)
வாசகர்
இயற்பெயர் | : Abi Abi |
இடம் | : திருச்சி |
பிறந்த தேதி | : 16-Oct-2000 |
பாலினம் | : பெண் |
சேர்ந்த நாள் | : 06-Apr-2020 |
பார்த்தவர்கள் | : 24 |
புள்ளி | : 0 |
Hi friends... இதில் எழுதும் அனைத்தும் என் கற்பனைகளே... இதுவரை எந்த புத்தகமும் படித்ததில்லை...சில நூல்களின் பெயர்களை எனக்கு கருத்தில் சொல்லுங்கள்.... and please support me friends கவிதையில் பிழை இருந்தாலும் என்ன மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதையும் தெரிவியுங்கள் நண்பர்களே...
என் அன்பு தோழி....
நிலவின் மீது காதல்
தொட முடியாத தொலைவில் நீ....
உன்னை விட முடியாத எண்ணத்தில் நான்....
(முழுக்கவிதை கீழே )
உன்னில் கிறுக்கனாய்மாறி கிறுக்கல்களை தொடங்கி விட்டேனடி...
அழகிய முகத்தின் பால் வண்ணம் கரை படியாதிருக்க முத்தக் கடலில் உன்னை குளிக்க வைப்பேனடி.....
கயல்களில் கருமை மையை பூசிக்கொண்டு என்னை மோகமடையச் செய்தாயடி....
சுயநலமில்லா உன் இரவு மடியில் என்னை உறங்க வைத்தது ஏனடி....
எங்கு சென்றாலும் நிழல் போல் வந்து பாவனை செய்தாயடி....
பௌர்ணமி அழகில் உன் மேல் பித்துப் பிடிக்க வைத்தாயடி...
ஈசன் சடை முடியில்அமர்ந்து என்னை பக்தி கடலில் மூழ்க செய்தாயடி...
அமாவாசை நாளில்காதல் செய்யபோலியாய் அழைத்துவிட்டு இருட்டு என்னும் வீட்டில் அடைந்து கொண்டாயடி....
கார்மேகமான உன் மேனியை அங்கும் இங்கும் அசைத்து காமம் கொள்ளவைக்கிறாயடி....
உனக்குள்ளும் ஆயிரம் இடர்கள் இருப்பதை உன் கயல்களில் வடியும் மழைத்துளிகள் புரிய வைத்ததடி....
உழைத்து களைத்து...வலியில் ஊரிப்போன என் மனதிற்கு உன் நட்சத்திரமான சிரிப்பு ஒரு சொர்க்கமடி.....
உன் நினைவுகள் என்னும் கொலுசுகள் என் உறக்கத்தை கெடுத்து செல்கிறதடி....
எத்தனை யுகம் எடுத்தாலும் உன் மேல் காதல் குறையப்போவதுமில்லையடி...நீ அழியப்போவதுமில்லையடி....
பேரண்டம் என்னும் இதயத்தில் இந்தமூடனுக்கு ஒரு இடம் ஒதுக்கினால் போதுமடி...
ஞாயிரை சுற்றி வரும் கோள்களாய் வலம் வந்து உன்னைக் காப்பேனடி...
இந்த கவிஞனின் காதலையும் கொஞ்சம் கண்ணெடுத்து பாரடி... நிம்மதியாய் கண்ணுறங்குவேணடி....
இப்படிக்கு...
நிலவின் ரசிகன்
(Abi Abi)