"அவன்" ******* அவனை கண்ட போது தெரியவில்லை அவன்...
"அவன்"
*******
அவனை கண்ட போது தெரியவில்லை அவன் என்னுடைய பாதி என்று.....💞
(முழுக்கவிதை கீழே)
👇👇👇👇👇
கயல்களால்(கண்களால்) கதைப்பவன் அவன்....
வில்வளை போன்ற
நாசியில் (மூக்கில்) என்
மூச்சுக்காற்றை களவாண்டவன் அவன்......
கரும்பின் சுவையை
ஒத்த அதரத்தால்(உதட்டால்)
என் மெல்லுடல்
சூட்டை முத்த துளிகளால் தனிய வைத்தவன் அவன்......
கண்ணனின் கருமை வண்ணத்தை திருடி
செய்தது போல் உடலை கொண்டு..... என்னை
கவர்ந்து இழுத்தவன்
அவன்....
குன்றுபோல் உடற்கட்டை(உடலமைப்பை) வைத்து என்னை
கட்டி இழுத்தவன்
அவன்....
கரங்கள்(கைகள்)என்னும் வீட்டில் என்னை. அடைக்கலப்படுத்தியவன் அவன்......
நிழலைப் போல என்னை பின் தொடர்பவன் அவன்.....
இதய அரியணையில் அரசியாய்
என்னை அமர வைத்தவன் அவன்.....
இடர்(பிரச்சனை) வரும் போது
வீரனாய் என்னை காத்தவன் அவன்...
கவலை கொஞ்சம்
தழுவும் போது
தாயாய் அரவணைத்தவன் அவன்.....
தவறுகள் செய்யும்
போது தந்தையாய்
அறிவுரை கூறியவன் அவன்......
விழிநீர்(கண்ணீர்) வழியும்
போது நண்பனாய்
துயர்(துயரம்)துடைத்தவன்
அவன்.....
என் நெஞ்ச கருவூலத்தை கொள்ளையடித்த கள்வன் அவன்.....
உயிரில் கலந்த
உதிரமாய் என்னுள்
கலந்தவன் அவன்..."என்னவன்"
அவன்...
காலம் கடந்தாலும்
உன் மேல் வைத்த அன்பு....கடல் போல்
வற்றாது....
தாய் சேய்(பிள்ளை) பாசத்திற்கு
அழிவதில்லாதது போல..... உன் மேல் நான் கொண்ட காதலும் அழியாது....
இப்படிக்கு....
உன்னுடையவள்💞