எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

#வறுமை எனும் உயிர்கொல்லி கொரோனாவைவிட கொடியது அந்த வைரஸை...

  #வறுமை எனும் உயிர்கொல்லி கொரோனாவைவிட கொடியது அந்த வைரஸை ஒழிக்க முடியும் நமைத் தாக்காதிருக்க , தொற்றாமல் இருக்க, தடுத்திட வழிமுறைகள் பல இருக்கிறது .முனைப்புடன் செயற்பட்டால் முயற்சிகள் வெற்றியைத் தரும் .


ஆனால் #ஏழ்மை என்பது வாழவிடாமல் மெல்ல மெல்ல உயிரைப் பறிக்கும் .
விரக்தியின் விளிம்பு வரை அழைத்து செல்லும் எளிதில் அழிக்க முடியாத விஷக்கிருமி.
அதனால் அடுத்த தலைமுறையும் பாதிக்க வாய்ப்பு உண்டு .

தற்சமயம் #கொரோனாவை அழிக்க ஒன்றிணைந்து பாடுபடுவது போல அடுத்து வறுமை எனும் தீரா நோயை நிரந்தரமாக ஒழித்திட உறுதி ஏற்க வேண்டும் . வறுமை என்கிற வார்த்தை மறைந்திட வேண்டும் .அந்த சொல் அகராதியில் இருந்து நீக்கிடும் நிலை உருவாக வேண்டும் ஏழ்மை எனும் எதேச்சதிகாரம் வீழ்த்தப்பட வேண்டும் . சமநிலை சமுதாயம் மலர வேண்டும்.

இந்த ஊரடங்கு காலத்தில் எனது உள்ளத்தில் தோன்றுவது , நாடே ஏழ்மையை நோக்கி பயணிக்குதோ என்று எண்ணிடத் தோன்றுகிறது . அந்நிலை உருவாகிடுவிமோ என்ற அச்சம் மனதில்எழுகிறது .

ஆனால் நிச்சயம் அதுபோன்று நிகழக் கூடாது . கொரோனா எனும் கொடூரத்தை அடித்து விரட்டியபின் #ஏழ்மை எனும் கொடுமையை , விஷக்கிருமியை அடியோடு மரணிக்க செய்திடல் வேண்டும் .



பழனி குமார்
09.04.2020  

நாள் : 9-Apr-20, 10:45 pm

மேலே