AjithaB - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : AjithaB |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 18-Sep-2014 |
பார்த்தவர்கள் | : 34 |
புள்ளி | : 1 |
என் படைப்புகள்
AjithaB செய்திகள்
விழியோரத்தில் தொக்கி நிற்கும் கனவின் வண்ணம்
நெட்டி முறிக்கும் கை தேடும் சாம்பல் கிண்ணி
பனிப்பூ சூடிய கரும்பச்சைக் காட்டு வழி
நோகாத தளர்நடை எழுப்பும் சாவகாச சருகொலி
சடையிடுக்கு ஒவ்வொன்றின் துளை மூடும் செவ்வந்தி
தும்பைக்கும் முறியாத நஞ்சுமிழும் கருநாகம் பித்தாகி
தலை கீழாய் நெளிந்து எழும் தாழம்பூ வனம்
வளைந்தாடும் நிலவொளியில் பாலாகும் மலையருவி
உடையெனும் சிறை இன்றி காற்றணைக்கும் சில்லுடல்
இவை எண்ணி,
கருவறைக்குள் வியர்த்தொழுகும் பொட்டும்,
நெஞ்சழுத்தும் பட்டுமாய்
கொடை முடிய காத்திருக்கிறாள்
என் குலத்து சிறுகாட்டுப் பெண் தெய்வம்!
கருத்துகள்
சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

காதல் சொன்ன...
kavithasan
30-Mar-2025

காதல் சொல்ல...
kavithasan
30-Mar-2025
