bala - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  bala
இடம்:  bodinayakanur
பிறந்த தேதி :  17-May-1975
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  27-Aug-2020
பார்த்தவர்கள்:  25
புள்ளி:  0

என்னைப் பற்றி...

EN ENNA MEGANGALIL ELUM ITHAYA MINNALKAL

என் படைப்புகள்
bala செய்திகள்
bala - எண்ணம் (public)
27-Aug-2020 3:05 pm

# கவிஞன்#
 


காகிதத்தில்
காதலின் கண்ணீரை ஈரம் செய்வேன்...

ஆணியே அறைந்தாலும் அதை சிறுமுள்ளின் வலியென ஆறுதல் சொல்வேன்... 
சருகுகளை பூக்களென்பேன் தேனென்று சொல்வதை விஷமென்று வாதிப்பேன்...

கனவுகளின்
கதையை கவிதையாக்குவேன்...

இமையென்னும் ஜன்னல் திறந்தால் பிரபஞ்சமே திறந்ததாக எண்ணிக்கொள்வேன்..

சோகங்களையும் நினைவுகளையும் சேகரித்துவைப்பேன்...

சிரிப்பீர்களோ! சிந்திப்பீர்களோ! கண்ணீர் வடிப்பீர்களோ கசக்கி எறிவீர்களோ? ஏதாவது ஒன்றை
என் பேனாவாலையே சாதிப்பேன்... 
ஏனென்றால் நான் கவிஞன்.. ்

மேலும்

bala - எண்ணம் (public)
27-Aug-2020 2:57 pm

கரிய நிற பொட்டுவைத்து 

கடல் பஞ்சின் உடலெடுத்து..
சின்ன சின்ன
நடை நடந்து
சிங்காரமாய்
நீ வந்தாய்!.. 

கூண்டுக்குள்ளே நீயிருந்தாய்!
குதுகாலாமாய் ஓடி வந்தாய்...

பத்து ரூபாய்
விலை வைத்து பறவையுன்னை
பசிக்குவிற்றான் .... 
கதை பேச ஆயிரம் கவிபாட மகளிடம்!! களிப்போடும் கதறலோடும் அங்குமிங்கும்
நடை பயின்றாய்.. 

 சிறுதானியக்கம்பும்
சிறு அலகால் கொத்திக்கொத்தி!! சின்னச் சின்ன நடைநடையால் சின்னப்பிள்ளையை சிறகாக்கி!!
சித்திரமே!
சிறு அழகே!
மகளை மானாட மயிலாக்கினாய்.... 

உன்னோடு வந்தவளை
உயிராகி மேய்ந்தவளை
மஞ்சள் சிறகோடு மகுடமாய் நின்றாலோ!! 

சிறு பெட்டியில் சிறையாகி
சிறுவாணி தண்ணீரை
சிறு அலகால் நீ குடித்து
சின்னச் சின்ன கண்ணசைவால் சித்திரமாய் நீ நின்றாய்!!
 


மடி மீது கதை
சொல்லி
துணையோடு
நல்லிரவில் 
துயில் கொண்டு வைகரையில் நீ எழுந்தாய் ! 

வைகரையில் எழுந்தோடி
வையகம் முடியவா? 
காக்கையின் கரையலை நம்பி!!
கரிய நிற பொன்னழகே! காணாமல் நீ போனாய்? 

க்ண்ணீரை காணிக்கையாக்கி கணப்பொழுதில் கற்சிலையாய்
கனத்த நெஞ்சை கழட்டிவைத்து
என்ன பதில் நான் சொல்வேன்
 
ந்ங்காத துயர் கொண்டு நீங்காத இடம் வைக்க இதயத்தோடு இதயமாய்
இதமாய் ! பயமின்றி
துணை தூங்க இதயத்தில் இடம் கொடுத்தாளோ!! 

உன் துணை தூங்க
என் மகள் இரவில் இதயத்தில் இடம் கொடுத்தாளோ?.

மேலும்

bala - எண்ணம் (public)
27-Aug-2020 2:53 pm

குட்டி குழந்தை கண்ணனே!!
குறும்பு செய்யும் கண்ணனே !!
கண்ணடிக்கும் கண்ணனே!!
எனை என்றுமே கண்கவர்ந்தாய்..

முத்துப்பல் கண்ணனே முத்தம் தா கண்ணனே முடிவிலா கண்ணனே குழலூதி குமரிகளை குதூகலித்தாய்..

மயிலிறகு கண்ணனே! மனதை மயக்கும் கண்ணனே !
மாயம் செய்யும் கண்ணனே !
மாதரை கொஞ்சிக்கொஞ்சி கொள்ளையடித்தாய்..

வெற்றிபெரும் கண்ணனே!! வெள்ளையுள்ள கண்ணனே!! வெண்ணை தின்னும் கண்ணனே!!
வெற்றி என்றும் எனக்குத்தருவாய்..

அகிலம் போற்றும் கண்ணணே!!
அறிவுசார்
கண்ணனே!! ஆனந்தமாடும் கண்ணனே!! அனைவரையும் ஆட்டுவித்தாய்...

பாட்ட (...)

மேலும்

bala - bala அளித்த எண்ணத்தை (public) பகிர்ந்துள்ளார்
27-Aug-2020 2:19 pm

இருண்டு கிடந்த இல்லத்தில் 

ஒளியேற்றினாய்...

வறண்டு போன கன்னங்களை முத்தமழையால் நனைத்தாய்...

கொலுசுகள்
இசைக்கும் பாடலுக்கு சிரிப்பொலியால் இசையமைத்தாய்....

சுட்டித்தனத்தில்
சுற்றி வரும் உலகமாய்!
 
பொல்லாத உலகத்தை ஒரு கை பார்ககலாமென்றா!!
 
வானத்தை விட்டு
பூமிக்கு வந்த சிறகில்லாத தேவதையா நீ ?
அருமை மகளே!!

மேலும்

bala - எண்ணம் (public)
27-Aug-2020 2:19 pm

இருண்டு கிடந்த இல்லத்தில் 

ஒளியேற்றினாய்...

வறண்டு போன கன்னங்களை முத்தமழையால் நனைத்தாய்...

கொலுசுகள்
இசைக்கும் பாடலுக்கு சிரிப்பொலியால் இசையமைத்தாய்....

சுட்டித்தனத்தில்
சுற்றி வரும் உலகமாய்!
 
பொல்லாத உலகத்தை ஒரு கை பார்ககலாமென்றா!!
 
வானத்தை விட்டு
பூமிக்கு வந்த சிறகில்லாத தேவதையா நீ ?
அருமை மகளே!!

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே