எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

குட்டி குழந்தை கண்ணனே!! குறும்பு செய்யும் கண்ணனே !!...

குட்டி குழந்தை கண்ணனே!!
குறும்பு செய்யும் கண்ணனே !!
கண்ணடிக்கும் கண்ணனே!!
எனை என்றுமே கண்கவர்ந்தாய்..

முத்துப்பல் கண்ணனே முத்தம் தா கண்ணனே முடிவிலா கண்ணனே குழலூதி குமரிகளை குதூகலித்தாய்..

மயிலிறகு கண்ணனே! மனதை மயக்கும் கண்ணனே !
மாயம் செய்யும் கண்ணனே !
மாதரை கொஞ்சிக்கொஞ்சி கொள்ளையடித்தாய்..

வெற்றிபெரும் கண்ணனே!! வெள்ளையுள்ள கண்ணனே!! வெண்ணை தின்னும் கண்ணனே!!
வெற்றி என்றும் எனக்குத்தருவாய்..

அகிலம் போற்றும் கண்ணணே!!
அறிவுசார்
கண்ணனே!! ஆனந்தமாடும் கண்ணனே!! அனைவரையும் ஆட்டுவித்தாய்...

பாட்டுப்பாடும் கண்ணனே!!
பாவம் போக்கும் கண்ணனே!! பாண்டவருக்கு உற்ற நண்பனே !!
பாரினில் என்றும் நீ நிலைத்து நின்றாய்...

துவாரகையின் மன்னனே!!
துன்பம் போக்கும் கண்ணனே !!
துச்சமென பகைவரை துவம்சம் செய்தாய்..

குருஷேத்திர கண்ணனே!! ருக்மினியின்
மன்னனே!! குந்திதேவியின் மருமகனே!! குறும்புகளால் நீ குளிர்வித்தாய்...

யசோதையின் மைந்தனே !!
யுவதிகளின் மன்மதனே!! யுதிர்ஷ்டனின் மன்னனே!!
யுகம் கடந்து
நின்றாய் ..

பார்த்திபனின் கண்ணனே!!
பார் போற்றும் கண்ணனே !!
பாரதம் பாடிய கண்ணனே !!
பகவத் கீதையின் கண்ணனே!!
நீலவண்ணனே!!
ஸ்ரீமன் நாராயணனே!!

மனம் மகிழ போற்றுகின்றேன்.. மாலை சூடி சாத்துகின்றேன்..
உன் புகழ் பாடுகின்றேன்..
கவிதை கொண்டு நித்தம் கும்பிடுவேன்..

பாலா.. 

பதிவு : bala
நாள் : 27-Aug-20, 2:53 pm

மேலே