எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

# கவிஞன்# காகிதத்தில் காதலின் கண்ணீரை ஈரம் செய்வேன்......

# கவிஞன்#
 


காகிதத்தில்
காதலின் கண்ணீரை ஈரம் செய்வேன்...

ஆணியே அறைந்தாலும் அதை சிறுமுள்ளின் வலியென ஆறுதல் சொல்வேன்... 
சருகுகளை பூக்களென்பேன் தேனென்று சொல்வதை விஷமென்று வாதிப்பேன்...

கனவுகளின்
கதையை கவிதையாக்குவேன்...

இமையென்னும் ஜன்னல் திறந்தால் பிரபஞ்சமே திறந்ததாக எண்ணிக்கொள்வேன்..

சோகங்களையும் நினைவுகளையும் சேகரித்துவைப்பேன்...

சிரிப்பீர்களோ! சிந்திப்பீர்களோ! கண்ணீர் வடிப்பீர்களோ கசக்கி எறிவீர்களோ? ஏதாவது ஒன்றை
என் பேனாவாலையே சாதிப்பேன்... 
ஏனென்றால் நான் கவிஞன்.. ்

பதிவு : bala
நாள் : 27-Aug-20, 3:05 pm

மேலே