Chakravarthi Bharati - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : Chakravarthi Bharati |
இடம் | : Tiruvannamalai |
பிறந்த தேதி | : 15-Jan-1993 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 23-Jun-2012 |
பார்த்தவர்கள் | : 392 |
புள்ளி | : 8 |
யதார்த்தங்களை பெரிதும் விரும்புபவன். இலக்கிய வீதியில் இலக்கற்ற பயணியாய் பயணிக்கவே எப்பொழுதும் விழைகிறேன்.
எதுவும் புதிதல்ல.
நீ
புன்னகை காட்டி செல்வதும்
புது சேலைக் கட்டி வருவதும்
பொன் வளையல்கள்
பூண்டு வருவதும்
பூங்குழலில்
பூக்கள் பூத்தது
போல் தொற்றமளிப்பதும்
பொட்டு வைத்து வருவதும்
எதுவும் புதிதல்ல.
நெற்றி சுருங்க பார்ப்பதும்
புருவங்கள் விரிய பார்ப்பதும்
கண் சிமிட்டி போவதும்
கற்கண்டு பற்களும்
மதுவொழுகும் இதழ்களும்
எதுவும் புதிதல்ல.
அதே வானம்
அன்றிருந்த அதே நிலவும்
அணைத்துக் கொள்ள
அதே நீயும்
அதே நாமும்
எதுவும் புதிதல்ல.
இவை
எல்லாம் புதிதல்ல
எனக்கும் உனக்கும்.
நம்
காதல் ஒன்றே வளரும்
புதிதானது என்றென்றும்...!
'இந்தியா - பாக்கிஸ்தான் எல்லையான வாகாவில் நிகழ்த்தப்பட்ட தற்கொலை தாக்குதலில் ஏழு குழந்தைகளும், பத்து பெண்களும் உட்ப்பட 55 பேருக்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர்' என்னும் அண்மைச் செய்தி நாம் அறிந்ததே. இதற்கு நம் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், பாக்கிஸ்தான் பிரதமர் நவாஷ் ஷெரிப்பும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இன்னும் உலகெங்கிலும் பல நாட்டின் தலைவர்கள் இச்சம்பவத்திற்கு எதிராக கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். தாக்குதலை நிகழ்த்திய தீவிரவாத அமைப்பான ஜந்துல்லாவும் சமத்தாக பெரும் சாதனையை நிகழ்த்தியது போல் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. இல்லை இதை செய்தது நாங்கள் தான் என்று தாலிபான் இயக்கம் பெரு
சூரியனை ஒத்த நின் துணிவுடன்
வரலாற்றின் உயரங்களிலிருந்து
உனை நேசிக்க கற்றுக் கொண்டோம்.
தெளிவுமிக்க ஆழமான
உன் இருப்பு,
இங்கு தெளிவாய் தெரிகிறது.
கமேண்டர் சே குவேரா!
உன் புகழும், வலிமிகு கரமும்
வரலாற்றில் பெறும் வெற்றியைக் காண,
சாண்டா கிளாரா முழுதும்
விழித்தெழுகிறது.
உன் ஒளிமிகு புன்னகையால்
வெற்றிக் கொடியை நாட்ட,
வசந்த சூரியன்களைக் கொண்டு
காற்றுகளை எரிக்க வருகிறாய்.
விடுதலையளிக்கும் உன் கரங்களின் திண்மைக்காக
எங்கு அவர்கள் காத்திருக்கிறார்களோ,
அங்கு
புரட்சிகரமான உன் காதல்
புதியதொரு பாதையில் பயணிக்கிறது.
உன்னுடன் நாங்கள் சேர்ந்து செயல்பட்டது போல்,
தொடர்ந்து செயல்படுவ
அன்பு முதல்
ஆசான் வரை
இன்பம் முதல்
ஈட்டல் வரை
உழைப்பு முதல்
ஊக்கம் வரை
எழுச்சி முதல்
ஏற்றம் வரை
ஐயம் முதல்
அய்யன் வரை
ஒழுக்கம் முதல்
ஓம்பல் வரை
ஔவை முதல்
அப்பர் வரை
அறிய வைத்தது
வகுப்பறை தான்.
நம்மை
பிறப்பிற்கு முன்
பேணுவது கருவறை
இறப்பிற்கு பின்
பேணுவது கல்லறை
இரண்டுக்கு(ம்) இடையில்
பேணுவது வகுப்பறை.
**வெ.ரா. சக்கரவர்த்தி பாரதி,
முதுகலை ஆங்கிலம் முதலாம் ஆண்டு,
ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
ஏனாத்தூர்.
காஞ்சிபுரம் - 631561**
வெள்ளை தாமரையில்
பாதங்கள் பதிய
பத்மாசனத்தில் அமர்ந்து
எட்டு மடிப்புகளில்
எட்டு உண்மைகளை
உலகிற்கு உணர்த்தியவனாய்
போதி மரத்தடில்
போகம் பெற்றவனாய்
சித்தனுக்கெல்லாம் சித்தன்
சித்தார்த்தன் என்னும்
புத்தன் அவன்
மலரடிகளை நாவால் ஏத்தி
மனத்தால் தொழுது
மட்டற்று மகிழ்வேன்.