வகுப்பறை

அன்பு முதல்
ஆசான் வரை

இன்பம் முதல்
ஈட்டல் வரை

உழைப்பு முதல்
ஊக்கம் வரை

எழுச்சி முதல்
ஏற்றம் வரை

ஐயம் முதல்
அய்யன் வரை

ஒழுக்கம் முதல்
ஓம்பல் வரை

ஔவை முதல்
அப்பர் வரை

அறிய வைத்தது
வகுப்பறை தான்.

நம்மை
பிறப்பிற்கு முன்
பேணுவது கருவறை

இறப்பிற்கு பின்
பேணுவது கல்லறை

இரண்டுக்கு(ம்) இடையில்
பேணுவது வகுப்பறை.

**வெ.ரா. சக்கரவர்த்தி பாரதி,
முதுகலை ஆங்கிலம் முதலாம் ஆண்டு,
ஸ்ரீ சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
ஏனாத்தூர்.
காஞ்சிபுரம் - 631561**

எழுதியவர் : சக்கரவர்த்தி பாரதி (12-Nov-14, 7:26 pm)
Tanglish : vagupparai
பார்வை : 1661

மேலே