எதுவும் புதிதல்ல
எதுவும் புதிதல்ல.
நீ
புன்னகை காட்டி செல்வதும்
புது சேலைக் கட்டி வருவதும்
பொன் வளையல்கள்
பூண்டு வருவதும்
பூங்குழலில்
பூக்கள் பூத்தது
போல் தொற்றமளிப்பதும்
பொட்டு வைத்து வருவதும்
எதுவும் புதிதல்ல.
நெற்றி சுருங்க பார்ப்பதும்
புருவங்கள் விரிய பார்ப்பதும்
கண் சிமிட்டி போவதும்
கற்கண்டு பற்களும்
மதுவொழுகும் இதழ்களும்
எதுவும் புதிதல்ல.
அதே வானம்
அன்றிருந்த அதே நிலவும்
அணைத்துக் கொள்ள
அதே நீயும்
அதே நாமும்
எதுவும் புதிதல்ல.
இவை
எல்லாம் புதிதல்ல
எனக்கும் உனக்கும்.
நம்
காதல் ஒன்றே வளரும்
புதிதானது என்றென்றும்...!