கருத்தில் பூத்த கவிதை-13-11-14 மனோவின் கவிதை 220085-படித்தபோது

எப்படி இருந்தாலும்
எனக்குப் பிடித்தவளே நீ!
பழைய காதலியானால் என்ன
பழசாகாத காதல் நம்முடையது..
சாயல் மாறலாம்
நம் காதலின்
சாயம் மாறாதது
காய்ந்து கொண்டிருக்கலாம்தான்
காத்துக்கொண்டும்தான் இருக்கிறேன்!
மாய்ந்துகொண்டிருக்கலாம் நான்
மறந்துகொண்டிருக்க வில்லையே!
சாய்ந்துவிட்டிருக்கலாம்தான்
சலித்துவிடவில்லை நான்!
கூடுபோட்ட வானமோ
ஓடு போட்ட வீடோ
நெஞ்சில்
கூடுகட்டிவிட்ட உன்னை
தேடுகின்ற கண்கள் என்னதே!
தேவை மீறி என்னைக்
குளிப்பாட்ட வேண்டாம்
தேவைக்காகவே என்று
சொட்டிவிட்டுப் போ!
என்னுள் உணர்வைத்
தட்டிவிட்டுப் போ!
உயிரைக் கொஞ்சம்
கொட்டிவிட்டுப் போ!
மழையே!
எட்டிமட்டும் போகாதே என்றும்!
== + ==

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (13-Nov-14, 8:57 am)
பார்வை : 118

மேலே