உண்மை காதல்

அன்பே என் உயிரே
மூடி வைத்த ஆசைகளை
மெதுவாய் உரைகின்றேன்
கேள் பெண்ணே ..!!
மோகம் இல்லை உன்மேல்
விரகதாபம் இல்லை கண்ணே
இருப்பதெல்லாம் காதல்
இணையில்லா காதல்
ஒன்றே தான்
பிள்ளை மேல் தாய்கொள்ளும்
காதல் போல்
பெற்றவர் மேல் பிள்ளைக்கொள்ளும்
காதல் போல்
மண்மேல் மழை கொள்ளும்
காதலைப்போல்
மலர்மேல் வண்டுகொள்ளும்
காதலை போல்
தமிழ் மேல் புலவர்கொள்ளும்
காதலை போல்
கவிமேல் கவிஞர் கொள்ளும்
காதலை போல்
உன்மேல் காதல்
கொண்டு நானும்
வாழ வேண்டும் பெண்ணே
தலைமுறை பல கண்டு
கட்டித்தழுவுவதும்
இதழ் முத்தம் பருகுவதும்
காமத்தில் இல்லை
கண்மணியே ..
உன் அணைப்பில் நான் கண்ட
அளவில்லா
காதலின் அதிசயத்திலே
என் கண்ணே......!!!