எம்பிரான் வாழ்த்து

வெள்ளை தாமரையில்
பாதங்கள் பதிய
பத்மாசனத்தில் அமர்ந்து
எட்டு மடிப்புகளில்
எட்டு உண்மைகளை
உலகிற்கு உணர்த்தியவனாய்
போதி மரத்தடில்
போகம் பெற்றவனாய்
சித்தனுக்கெல்லாம் சித்தன்
சித்தார்த்தன் என்னும்
புத்தன் அவன்
மலரடிகளை நாவால் ஏத்தி
மனத்தால் தொழுது
மட்டற்று மகிழ்வேன்.

எழுதியவர் : சக்கரவர்த்தி பாரதி (12-Nov-14, 9:20 pm)
சேர்த்தது : Chakravarthi Bharati
பார்வை : 240

மேலே