தாஜீதீன் - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  தாஜீதீன்
இடம்:  குன்னம்
பிறந்த தேதி :  09-Nov-1997
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  04-Oct-2020
பார்த்தவர்கள்:  14
புள்ளி:  1

என்னைப் பற்றி...

தாஜிதீன் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த குன்னம் கிராமத்தில், மைதீன்பாட்சா மற்றும் சுபைதா தம்பதியினருக்கு கடைக்குட்டியாக (நவம்பர் 09) பிறந்தார். அவரது புனைபெயர் "தாஜ்" மூலம் நன்கு பிரபலமானவர். அவர் சென்னை வேல்ஸ் பல்கலைக்கழக உயிர் தொழில் நுட்பவியல் இளங்கலை பயின்று வருகிறார். எழுதும் ஆர்வம் அவரது கடந்தகால வாழ்க்கையுள் தனது மருத்துவ படிப்பில் பெற்ற எதிர்மறை அனுபவங்கள் தந்த தனிமை இவரை கவிதை எழுத தூண்டிற்று. அத்தனிமையைத் தலைப்பாக மாற்றி தனது முதல் கவிதையை வடித்து "தகுதியற்ற கவிஞன் "என்னும் சமூக ஊடகப் (instagram) பக்கத்தில் தனது படைப்புகளை பதிவேற்றியுள்ளார். சிறுவயது முதல் நிறைய புத்தகங்களோடு பயணித்தவர். திரைப்படத்தின் மீது கொண்ட ஆறாக் காதலால் பார்த்தவுடன் அந்த கதாபாத்திரமாக மாறி நடித்தலைப் பொழுதுபோக்காக கொண்டவர். இயற்கையை எழில் காட்சிகளை படம்பிடித்தலை தனது தொழிலாக (Freelancer) கொண்டு அதில் நிறைவு காண்கிறார். எழில் இலக்கியப் பேரவை அவருக்கு முதல் மேடை அமைத்துத் தர "பகுத்தறிவு பகலவன் " கவிதைக் களனாகி எழில் கவித்தென்றல் விருதுக்கு சொந்தக்காரனாக்கியது. கவி படைக்க இல்லில் தடை விதிக்க அதை உடைத்து இலக்கிய வானில் தடம் பதித்து தனக்கென ஓர் இடத்தைப் பிடிக்கத் துடிக்கும் இளங்கவிஞர் இவர்.

என் படைப்புகள்
தாஜீதீன் செய்திகள்
தாஜீதீன் - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Oct-2020 5:56 pm

பெதும்பை, மங்கையின் ஆடைதான் கற்பழிப்புக்கு வழிவகுக்கிறது என்றால் !
பேதை என்ன செய்தாள் ?
தெரிவை என்ன செய்தாள் ?

பேசும் பேச்சு உனக்கு இச்சை தூண்டுகிறது என்றால் !
ஊமை பெண் என்ன செய்தாள் ?

பழகும் விதம் உனக்கு இச்சை தூண்டுகிறது என்றால் !
மனநலம் இல்லாத பெண் என்ன செய்தாள் ?

பெண்ணின் நடையும், நடனமும் உணர்ச்சி எழுப்புகிறது என்றால் !
ஊனப் பெண் என்ன செய்தாள் ?

உன் பார்வையிலும்,
எண்ணத்திலும் இச்சை கொண்டு பெண்ணை பார்ப்பதற்கு
பெண் ஏன் தண்டனை பெறுகிறாள் ?

நீ இழைத்த தவறுக்கு,
உனக்குத் தையல் பொரியும் !
அவளுக்கு வாய்க்கு அரிசியும் !

அவள் உன் மனைவி ஆயினும்,
அவள் பாரத்தை ஆயினும்,
அவளின் விருப்பம் இன்றி

மேலும்

கருத்துகள்

மேலே